19 Feb 2017

கல்முனையில் நடந்தேறிய நட்புறவு உதைபந்தாட்டப் போட்டியில் எப்.சி.இலண்டன் அணி வெற்றியீட்டியது.

SHARE
(ALM.Sinas)


கல்முனையில் நடந்தேறிய நட்புறவு உதைபந்தாட்டப் போட்டியில் எப்.சி.இலண்டன் அணி வெற்றியீட்டியது.

இலங்கை சமாதான உதைபந்தாட்ட ஒன்றியத்தின்  அழைப்பில் இலங்கை நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டு வந்த  எப்.சி.இலண்டன்  உதைபந்தாட்ட அணியினருக்கும் கல்முனை ஈஸ்டன் யூத் மூத்தோர் அணியினருக்குமாக நட்புறவு சினேகபூர்வ உதைபந்தாட்டப் போட்டி கடந்த வியாளக்கிழமை(16) கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
90 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் 30 நிமிடத்துக்குள்  கல்முனை ஈஸ்டன் யூத் மூத்தோர் அணி இலண்டன் எப்.சி.அணியினருக்கு எதிராக 01 கோலினை போட்டது. இதனை தொடர்ந்து போட்டி விறுவிறுப்பாக காணப்பட்டது. போட்டி முடிவடையும் நேரத்துக்குள் இலண்டன் எப்.சி.அணியினர்  கல்முனை ஈஸ்டன் யூத் மூத்தோர் அணியினருக்கு எதிராக தொடர்ந்து 05 கோலினை போட்டார்கள். இந்தப் போட்டியில் 05-01 என்ற கோல் வித்தியாசத்தில் எப்.சி.இலண்டன் அணி வெற்றியீட்டியது.
மருதமுனை ஹைக்குறோ சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எம்.எல்.எம்.ஜமால்தீன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போட்டிக்கு பிரபல தொழிலதிபர் எம்.ஐ.எம்.பரீத் பிரதம அதிதியாகவும் அம்பாரை மல்வத்தை 241வது இராணுவ படைப்பிரிவு கட்டளைத் தளபதி பிரிகேடியர் மஹிந்த முதலிகே கௌரவ அதிதியாகவும் கல்முனை பொலிஸ் நிலைய சமூக தொடர்பாடல் பிரிவின் பொறுப்பதிகாரி ஐ.எல்.ஏ.வாஹிட் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர். (வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)


SHARE

Author: verified_user

0 Comments: