முனைப்பு அமைப்பினால் வாழ்வாதார மற்றும் மருத்துவ உதவி
தன்னார்வத் தொண்டு அமைப்பான முனைப்பு ஸ்ரீலங்கா நிறுவனத்தினால் வாழ்வாதார மற்றும் மருத்துவ உதவி வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை 12.02.2017 மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் முனைப்பு ஸ்ரீலங்கா நிறுவனத்தின்
தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பயனாளி ஒருவருக்கு 36 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மா அரைக்கும் இயந்திரம், மற்றொரு பயனாளிக்கு 38 ஆயிரம் ரூபாய் பெறுமதிhயன தையல் இயந்திரம் என்பனவும் மேலும் ஒரு பயனாளிக் குடும்பத்திற்கு ஆடுவளர்ப்பிற்காக 10 ஆயிரம் ரூபாவும், இன்னொரு குடும்பத்திற்கு சிற்றுண்டி தயாரிப்பதற்காக 30 ஆயிரம் ரூபாவும், புடவைக் கடை அமைப்பதற்கான மற்றுமொருவருக்கு 40 ஆயிரம் ரூபாய் நிதி உதவியும், பாரிச வாதத்தால் பாதிக்கப்பட்ட கணவன் மனைவி ஆகியோருக்கு மருத்துவத்துக்கான உதவி 20 ஆயிரம் ரூபாய் நிதியுதவியும் வழங்கப்பட்டன.
மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் வி. தவராசா முனைப்பு சுவிஸ் அமைப்பின் நிருவாக உறுப்பினர்கள் கிருபா விதுஷா பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் எம். அருணன் செயலாளர் ஆர். குகநாதன், பொருளாளர் ஏ. தயாநந்தரவி, ஆலோசகர் கே. புஸ்பராசா அகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment