21 Feb 2017

துறைநீலாவணை தெற்கு பிரிவிற்கான சிவில்பாதுகாப்பு குழுக்கூட்டம்

SHARE
(க.விஜி)

துறைநீலாவணை தெற்கு பிரிவிற்கான சிவில்பாதுகாப்பு குழுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில்  பல்தேவைக்கட்டிடத்தில் கிராமசேவை உத்தியோகஸ்தர் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் களுவாஞ்சிகுடி பொலிஸ்நிலையத்தின் பதில்பொறுப்பதிகாரி என்.ரீ.அபூபக்கர்,ஓய்வுபெற்ற பிரதேச சபைச்செயலாளர் கே.புலேந்திரன்,பிரபல சமாதானநீதவான் முருகேசு புஸ்கரன்,கிராம அபிவித்திச்சங்க தலைவர் .சுசீலன்,மகளீர் சங்கத்தலைவி விமேஸ்வரி,சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர் காசுபதி -உதயகுமார்,உட்பட சிவில்பாதுகாப்பு சபை உறுப்பினர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.இதன்போது பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.
1.துறைநீலாவணை பிரதானவீதியில் குப்பைகள்,கோழிக்கழிவுகள்,மிருகங்களின் கழிவுகள்,இலத்திரணியல் கழிவுகள்,பிளாஸ்ரிக் பொருட்களை இரவிலும் பகலிலும் வீசுபவர்களை கைதுசெய்வதற்கு விஷேட பொலீஸ் குழுக்களை நியமித்து  வீதிரோந்து சேவையின் மூலம் கைதுசெய்து சட்டநடவடிக்கை மேற்கொள்ளல்.இந்த வீதியில் பொழுதுபோக்கை கழிக்கும் நோக்கோடு  குளத்தில் தூண்டில் போடுபவரையும்,கஞ்சா புகைப்போரையும்  சட்டநடவடிக்கை மேற்கொள்ளல்.இதன்மூலம் போக்குவரத்தை நிவர்த்திசெய்தல்.
2.பிரதேசத்தில் வாகன அனுமதிப்பத்திரம்,தலைக்கவசம்,வாகனப்பத்திரங்கள் இல்லாமல் வாகனத்தை செலுத்துவோருக்கு எதிராகவும்,குறைந்தவயதில் வாகனத்தை செலுத்துவோருக்கும்,மதுபோதையில் வாகனத்தை செலுத்துவோருக்கும், கூடுதலான நபர்களை ஏற்றிக்கொண்டு வேகமாக செலுத்துவோருக்கும் எதிராக நடவடிக்கை மேற்கொள்ளல்.
3.பொதுமக்களின் ஒத்துழைப்புடன் குற்றச்செயல்கள்,பகல்நேரக்கொள்ளை,வீடுடைப்பு திருட்டுக்கள்,பாடசாலை பிரத்தியேக வகுப்புக்களுக்கு செல்லும் மாணவிகள்,பிள்ளைகள் மீது தெரியாத நபர்கள் கீழ்தரமான வன்முறைகள் துன்புருத்தல்கள் மேற்கொள்ளும் நபர்களை மடக்கிப்பிடித்து பொலிஸ் மூலம் சட்டநடவடிக்கை மேற்கொள்ளல்.
3.பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருட்களை விற்பனை செய்வோரை இனங்கண்டு அவர்களுக்கு முறையான நடவடிக்கை மேற்கொள்ளல்.போதைப்பொருட்களை பாவித்து பிரதேசத்தில் அமையின்மையையும்,கலாச்சாரக் சீரழிவுகளை ஏற்படுத்துவோருக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளல்.
4.சுற்றாடலையும்,வீட்டையும் அசுத்தமான முறையில் வைத்திருந்து டெங்குநோயை ஏற்படுத்துவோரை இனங்கண்டு அவர்களுக்கு சட்டநடவடிக்கை மேற்கொள்ளல்.போன்ற விடயங்கள் ஆராயப்பட்டது

SHARE

Author: verified_user

0 Comments: