அடுத்த செவ்வாய்க்கிழமை மூதூருக்கு புதிய வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனம் செய்யப்படுவார் என கிழக்கு மாகாண முதலமைச்சர் தங்களிடம் உறுதியளித்துள்ளதாக கிழக்கு மாகாண
தமிழாசிரியர் சங்க பொதுச் செயலாளர் எஸ். ஜெயராஜா தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளரை உடனடியாக இடம் மாற்றக்கோரி கடந்தவாரமும் இவ்வாரம் செவ்வாய்க்கிழமையும் மூதூர் மற்றும் திருகோணமலை நகரங்களில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்.
செவ்வாய்க்கிழமை (21.02.2017) திருகோணமலையிலுள்ள முதலமைச்சர் செயலகத்தின் வாயிற் கதவை மூடி ஆர்ப்பாட்டம் நடாத்திய ஆசிரியர்கள் கிழக்கு மாகாண தமிழாசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தலைமையில் குறித்த கல்விப் பணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கும் வண்ணம் உடனடி இடமாற்றத்தை கோரி முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடாத்தினர்.
இதன்போது வரும் செவ்வாய்க்கிழமைக்குள் (28.02.2017) மூதூருக்கு புதிய வலயக் கல்விப் பணிப்பாளர் நியமிக்கப்படுவார் என முதலமைச்சர் உறுதியளித்ததாக கிழக்கு மகாணா தமிழாசிரியர் சங்கப் பொதுச் செயலாளர் எஸ். ஜெயராஜா தெரிவித்தார்.
இந்த வாக்குறுதி நிறைவேற்றுப்படாத பட்சத்தில் எதிர்ப்புப் போராட்டம் தொடரும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் மீது வலயக் கல்விப் பணிப்பாளர், அதிபர் ஆசிரியர்களை தகாத வார்த்தைகளால் பேசுதல், ஆசிரியர்களை தொழுகைக் கடமையைச் செய்ய விடாது தடுத்தல், கற்கக்கூடிய மாணவர்களுக்கே கற்பியுங்கள் என்று அசிரத்தையான உத்தரவிடல் போன்ற மூன்று பிரதான பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டன.
“ஒழுக்கமான கல்விப் பணிப்பாளரே எங்களுக்கு தேவை” “விசாரணைக்குட்படுத்தப்பட்டவருக்கு அதிகாரமளித்தது எப்படி” ஆகிய பதாதைகளை ஆசிரியர்கள் ஏந்தியிருந்தனர்.
இந்த விடயம் குறித்து சம்பந்தப்பட்ட வலயக் கல்வி அதிகாரியை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரி நின்றனர்.
0 Comments:
Post a Comment