கடந்த வருடம் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகளுக்கான நிதி இதுவரை மாகாண சபைக்கு கிடைக்கவில்லை மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் அக்கீல்
அர்ஷாத்
கடந்த வருடம் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகளுக்கான நிதி இதுவரை மாகாண சபைக்கு கிடைக்கவில்லை. அதனால் அந்த நிதியைப் பெற்றுக் கொள்ளும் வண்ணம் தினமும் கிழக்கு மாகாண முதலமைச்சர் அலைந்து திரிய வேண்டியுள்ளத என ஏறாவூர் நகர சபையின் முன்னாள் உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளருமான அக்கீல் அர்ஷாத் தெரிவித்தார்.
ஏறாவூரில் சனிக்கிழமை இரவு (25.02.2017) இரவு இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின்போது அவர் உரையாற்றினார்.
தொடர்ந்து அங்கு உரையாற்றிய அவர், நிலைமை இப்படியிருக்கும்போது மாகாண சபைகளுக்கான நிதி வழங்கும் பொறிமுறை என்ன, அவர்களுக்குரிய அதிகாரங்கள் என்ன என்ற ஆரம்ப அரசியல் அறிவு கூட இன்றி எவ்வாறு சில பௌத்த மதகுருமார் பௌத்த மதத்திற்கு இழுக்கை ஏற்படுத்துகின்றனரோ அதேபோன்று முபாரக் அப்துல் மஜீத் எனும் மௌலவி இழுக்கை ஏற்படுத்துவதாகவும் அக்கீல் அர்ஷாத் சுட்டிக்காட்டினார்.
கிழக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் இன்று கல்வியில் பின்தங்கிய மாகாணமாக இருப்பதை யாராலும் மறுக்க முடியாது என்பதுடன் அதற்கு அந்த மாகாணத்துக்கான நிதி வசதிகள் போதாமையும் அரசாங்கம் இதுவரை உரிய கவனம் செலுத்தாமையும் ஆகும் என்பதை முதலில் கிழக்கு மாகாணத்தில் ஒரு அரசியல் பிரதிநிதியாக தம்மைக் காட்டிக் கொள்ளும் முபாரக் மௌலவி தெரிந்து கொள்ள வேண்டும்.
கிழக்கு மாகாண முதலமைச்சரின் மீதுள்ள காழ்ப்புணர்வில் மாகாணத்திற்கான நிதிகளை குறைப்பதற்கும் அவற்றை தடுப்பதிலும் சில முஸ்லிம் அமைச்சர்களே முயற்சிகளை முன்னெடுத்துவருவது சில சிங்களப் பத்திரிகைகளில் பகிரங்கப்படுத்தப்பட்டமையை நாம் குறிப்பிடவேண்டும்.
கிழக்கு மாகாணத்தின் மேல் உண்மையான அக்கறையுள்ளவர்கள் போல் நீலிக்கண்ணீர் வடிக்கும் அவர்களுக்கு உண்மையாக கிழக்கு மக்கள் மீது அக்கறையிருந்தால் ஏன் அமைச்சரவையில் கிழக்கு முதலமைச்சர் மீது அவதூறு கூறி மாகாணத்துக்கான சலுகைகளை தடுக்க முற்பட வேண்டும்?
அது மட்டுமன்றி கடந்த வருடம் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகளுக்கான நிதி இதுவரை மாகாண சபைக்கு கிடைக்கவில்லை என்பதையும் அதற்கான பற்றுச் சீட்டுக்களை வைத்துக் கொண்டு இப்பொழுதும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நிதியமைச்சின் படிகளுக்கு ஏறிக் கொண்டிருக்கின்றார் என்பதை முபாறக் மௌலவி அறிவாரா?
அது மட்டுமன்றி இந்த வருடத்துக்கான வரவு செலவுத்திட்டம் மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட போதும் இதுவரை அதற்காக நிதியில் மாகாண சபைக்கு ஒரு சதம் கூட கிடைக்கப் பெறவில்லை என்பதையாவது அரசியல் ஞானமற்ற முபாரக் மௌலவிக்கு தெரியுமா?
முபாராக் மௌலவி அமைச்சர் ரிஷாத்துக்கு வக்காலத்து வாங்குவதாக இருந்தால் அண்மையில் கிழக்கு மண்ணிற்கு வந்து இங்குள்ள குடிசைகளை இல்லாமலாக்குவதாக கூறியிருந்தாரே முதலில் அவரின் வன்னி மாவட்டத்தில் உள்ள பாலைக்குழி மற்றும் கரடிக்குழி ஆகிய பகுதிகளில் உள்ள குடிசைகளில் வாழும் மக்களுக்கு முதலில் வீட்டு வசதிகளை வழங்கட்டும்.
கிழக்கு முதலமைச்சர் கிழக்கு மாகாணத்தின் கல்வித்துறையை அபிவிருத்தி செய்ய தம்மால் இயன்ற சகல முயற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றார். இந்த நன்முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்.
0 Comments:
Post a Comment