மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்.களுதாவளை மகாவித்தியாலத்தில் வருடாந்த இல்ல மெய்வல்லனர் விளையாட்டுப்போட்டி செவ்வாய்க் கிழமை (28) பிற்பகல் வித்தியாலய அதிபர் பி.காப்தீபன்
தலைமையில் நடைபெற்றது.
பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ந.புள்ளநாயகம், உள்ளிட்ட கல்வி அதிகாரிகள், கல்விமான்கள், ஏனைய உயர் அதிகாரிகள், மாணவர்கள், பெற்றோர்கள், கிராம பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பழைய மாணவர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது பல விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றதோடு, அணிநடை, மற்றுமு; கலாசார பாரம்பரியங்களுடன் கூடிய மாணவர்களின் உடற்பயிற்சி கண்காட்சியும் இதன்போது இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சான்றிதழ்களும், வெற்றிக்கேடயங்களும் வழங்கப்பட்டன.
0 Comments:
Post a Comment