17 Feb 2017

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசையும்இ த.தே.கூட்டமைப்பையும் உடைப்பதற்கு சில சக்திகள் ஊடுருவி இருக்கின்றன – கிழக்கு முதலமைச்சர்.

SHARE
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை உடைப்பதற்கு இந்நாட்டு சக்திகள் மாத்திரமின்றி வெளிநாட்டு சக்திகளும் ஊடுருவி இருக்கின்றன. இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்கு அல்லது சீண்டிப்பார்ப்பதற்கு உரிய சதிகள் எழுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளன. இக்காலகட்டத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகம் ஒற்றுமைப்பட்டு குரல் கொடுக்க வேண்டிய தேவை எமக்குள்ளிருக்கின்றது. 

தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து செயலாற்ற வேண்டிய தேவை இருக்கின்றது. அப்போதுதான் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காதன குரலாக ஒலிக்கும். சம்மந்தன் ஐயாவின் காலத்தில் எமக்குரிய தீர்வுகள் எட்டப்பட வேண்டும். எனவே நாங்கள் அனைவரும் எதிர்பார்த்திருக்கின்ற தீர்வை பெற்றுத்தர வேண்டிய பெறுப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இருக்கின்றது. அத்தீர்வு எமக்குக் கிடைக்கும் என எதிர்பார்த்திருக்கின்றோம்.
என கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தினால், அரச ஆடு மரபுரிமை வள மேம்பாட்டு நிலையம் தும்மபங்கேணியில் செவ்வாய்க் கிழமை (14) திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

நல்லாட்சி  அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்பு ஒரு வருடம் மாத்திரம் ஓரளவு அதிகமாக நிதி ஒதுக்கீடு கிழக்கு மாகாணத்திற்கு வந்தது ஆனால் 2017 ஆம் ஆண்டு அது 50 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளன. சிறுபான்மை மக்களும். பெரும்பான்மை மக்களும், அதிகாரப் பரவலாக்கலுக்கும், இனப்பிரச்சனைக்கான தீர்வுக்காகமத்தான் வாக்களித்திருந்தார்கள். இந்த பொறுப்பை இந்த அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதா என்ற கேள்வி எமக்கு எழுகின்றன. அரசியல் அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றனவான என எண்ணத் தோன்றுகின்ற அந்த அளவிற்கு நடவடிக்கைகள் மாறியிருக்கின்றன.

இருக்கின்ற 13 வது அதிகாரத்தைத் மாகாணசபைக்குத் தருவதற்கு எந்த வித பேச்சுவார்த்தைகளும் தேவையில்லை. இவ்விடையத்தில் இதுவரைகாலமும் மேற்கொண்டு வந்த இழுத்தடிப்புக்கள் போன்று தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

கல்விக்கு 95 வீதம் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன என்றால் ஏன் கல்விக்காக 95 வீதம் நிதி ஒதுக்கீடுகளை மாகாணசபைக்கு வழங்க முடியாது எனக் கேட்கின்றோம்.

நாட்டிலே உள்ள 2 பெரும்பான்மை அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்துள்ள இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்மந்தன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஆகிய 4 தலைவர்களும் இணைந்து ஜனநாயக ரீதியில் தீர்வு காணப்படாவிடின் எப்போது தீர்வு எட்டப்படும்.

சுதந்திரம் கிடைத்த காலத்திலிருந்து சிறுபான்மைச் சமூகம் ஏதோ ஒரு வகையில் திட்ட வட்டமாக நசுக்கப்பட்டு வந்த வரலாறுகள் உள்ளன. இவற்றுக்குள் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை உடைப்பதற்கு இந்நாட்டு சக்திகள் மாத்திரமின்றி வெளிநாட்டு சக்திகளும் ஊடுருவி இருக்கின்றன. இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்கு அல்லது சீண்டிப்பார்ப்பதற்கு உரிய சதிகள் எழுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளன. இக்காலகட்டத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகம் ஒற்றுமைப்பட்டு குரல் கொடுக்க வேண்டிய தேவை எமக்குள்ளிருக்கின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து செயலாற்ற வேண்டிய தேவை இருக்கின்றது. அப்போதுதான் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காதன குரலாக ஒலிக்கும். சம்மந்தன் ஐயாவின் காலத்தில் எமக்குரிய தீர்வுகள் எட்டப்பட வேண்டும். எனவே நாங்கள் அனைவரும் எதிர்பார்த்திருக்கின்ற தீர்வை பெற்றுத்தர வேண்டிய பெறுப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இருக்கின்றது. அத்தீர்வு எமக்குக் கிடைக்கும் என எதிர்பார்த்திருக்கின்றோம். என அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: