தும்பங்கேணி வீதியில் நேற்று(20) இடம்பெற்ற வீதி விபத்தில் பழுகாமத்தைச் சேர்ந்த 24 வயதுடைய அரசரெத்தினம் விஜிதரன் எனபவர் இந்த வீதி விபத்தில் படுhயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,
தும்பங்கேணி காந்திபுர சந்தியில் எதிரே வந்துகொண்டிருந்த பெரிய லொறியொன்றுடன் மோதியதன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயங்களுடன் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைபெற்று வருகின்றார்.
0 Comments:
Post a Comment