11 Feb 2017

இந்த அரசாங்கத்தால் நிச்சயமாக எதனையும் செய்ய முடியாது-சுரேஸ்

SHARE
இந்த அரசாங்கத்தால் நிச்சயமாக எதனையும் செய்ய முடியாது. எங்களுக்குத் தேவை சர்வதேச விசாரணையே தவிர இந்த அரசாங்கத்திலிருந்து ஒரு துரும்பளவும் நீதியைக் கூட நாங்கள் எதிர்பார்க்க முடியாது என்பதை முதலில் எங்களது தலைவர்களும் புரிந்து கொள்ள வேண்டும்” என,
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற எழுக தமிழ் பேரணி நிகழ்வில் கலந்துகொண்டு பேசுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில், “கந்த இரண்டு வருட காலத்தில் ஒரு துரும்புகூட நகர்த்தாத இந்த அரசாங்கம், வருகின்ற மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் ஏற்கெனவே கூறியது போன்று இன்னும் இரண்டு வருடம் கால அவகாசத்தை கேட்டவிருக்கின்றது. அவர்களுடன் இணைந்து செயற்படுவதனூடான இரண்டு வருடத்தில் அவர்களால் எதனையும் சாதிக்க முடியவில்லை. என்பதையும் எமது தலைமைகள் புரிந்து கொள்ள வேண்டும். 

நாங்கள் ஒன்றாக இணைந்து எதிர்க்கட்சி தலைவராக இருப்போம். ஆனால், ஆளும் கட்சியுடன் இணைந்து செயற்படுவோம் என்று கூறுபவர்களால் தமிழ் மக்களுடைய கோரிக்கை எதனை தீர்க்க முடிந்தது என சிந்தித்துப் பாருங்கள்” என்றார். “நாங்கள் எமது உரிமையை பெற்றுக்கொள்வதற்கு இலட்சக்கணக்கான மக்களின் உயிர்களை தியாகம் செய்து, பல்லாயிரக்கணக்கான மக்களை பலிகொடுத்து நாங்கள் சேர்த்து வைத்த சொத்துகளை இழந்து நாங்கள் எமது உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு என்றும் போர்க்கொடி உயர்த்த வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம்” எனவும் தெரிவித்தார். 
SHARE

Author: verified_user

0 Comments: