(பழுகாமம் நிருபர்)
மட்டக்களப்பின் வாசம் உதவும் உறவுகள் அமைப்பால் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுமுந்தன்வெளி அ.த.க.பாடசாலையின் ஐந்து மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டியும், மண்டூர் 40 அ.த.க.பாடசாலையில் ஒரு மாணவிக்கு துவிச்சக்கர வண்டியும், 35 மாணவர்களுக்கு புத்தகப்பையும் வழங்கி வைக்கப்பட்டது. இதனை

அவுஸ்ரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் வழங்கி வைத்தனர். இந்நிகழ்வில் வாசம் உதவும் உறவகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் அமைப்பின் அனுசரனையாளரான ஜேர்மனியில் வதியும் த.பவானந்தராசா,இணைப்பாளர் விஜய், போரதீவுப்பற்று பிரதேச சிவில் அமைப்பின் தலைவரும், வாசம் உதவும் உறவுகள் அமைப்பின் போரதீவுப்பற்று பிரதேச இணைப்பாளருமான வ.சக்திவேல் அவர்களும் கலந்து கொண்டனர்.
வாசம் உதவும் உறவுகள் அமைப்பு மட்டக்களப்பில் மாத்திரமின்றி வடக்கு கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்காக வேண்டி சேவை செய்துகொண்டிருக்கின்றது. இவ்வாறான உதவிகள் அனைத்தும், புலம்பெயர்ந்து வாழும் எமது தமிழ் உறவுகளின் உதவிகளுடன் மேற்கொண்டு வருகின்றோம் என வாசம் உதவும் உறவுகள் அமைப்பின் தலைவர் எஸ்.பிரபாகரன் இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment