களுத்துறையில் சிறைக் கைதிகளை ஏற்றிச் சென்ற வாகனத்தின்மீது திங்களன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அம்பாறை-காரைதீவு கிராமத்தைச் சேர்ந்த சிறைச்சாலை உத்தியோகத்தரான
சிவானந்தம் தர்மீகன் (வயது 24) கொல்லப்பட்டுள்ளார்.
இவர் சமீபத்தில்தான் அரசாங்க அலுவலராக நியமனம் பெற்று சேவையில் இணைந்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவத்தில் மேலும் இரு சிறைச்சாலை அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன் மூன்று அதிகாரிகள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment