26 Feb 2017

கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளரின் செய்தி மனதை நெகிழ வைக்கின்றது. மட்டு. வலயக்கல்வி பணிப்பாளர் கவலை

SHARE
(பழுகாமம் நிருபர்)

கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளரின் செய்தி மனதை நெகிழ வைக்கின்றது. மட்டு. வலயக்கல்வி பணிப்பாளர் கவலை

கிழக்கு மாகாண சபையின் 79வது கூட்டத்தொடர் கடந்த 22.02.2017ம் திகதி சந்திரதாஸ கலப்பதி தலைமையில் இடம்பெற்றது. இதன்போது ஆரையம்பதி மகா வித்தியாலய பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வருகின்ற வளங்களை சூறையாடுகின்றது. இதற்கு
மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளரும் துணை போகின்றார் என்னும் சந்தேகம் வருகின்றது என்ற செய்தியினை வெளியிட்டுள்ளார். இந்த செய்தியினை ஊடகங்கள் வாயிலாக அறிந்ததும் நான் மிகவும் மனவேதனையடைந்தேன்.

காரணம் இந்த பிரச்சினை தொடர்பாக என்னுடன் தொடர்பு கொண்டு பிரதிதவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் அவர்கள் பேசியதே கிடையாது. என்னுடன் பேசிவிட்டு இந்த செய்தியினை வெளியிட்டிருந்தால் நான் மனவேதனையடைந்திருக்கமாட்டேன் என தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில், ஆரையம்பதி மகா வித்தியாலய ஊழல்கள் தொடர்பாக அதிபருக்கெதிராக நான் எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கமுடியாது. அந்த அதிகாரம் மாகாண கல்வி பணிப்பாளருக்கு உண்டு. ஆகவே எனக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் கடந்த டிசம்பர் மாதம் பிரச்சினை தொடர்பான விசாரணையினை மேற்கொண்டு அறிக்கையிடுமாறு பணித்திருந்தார். 

டிசெம்பர் மாதம் பாடசாலை விடுமுறை காலம் என்பதால் நான் பாடசாலை ஆரம்பித்ததும் வலயக்கல்வி அலுவலகத்தில் இருந்து ஒரு குழுவென்றை விசாரணைக்காக அனுப்பியிருந்த போது அங்கே பிரச்சினைக்குரிய ஆசிரியர்கள் க.பொ.த சா.த பரீடசை விடைத்தாள் திருத்தும் பணிக்கு சென்றமையினால் விசாரணையை முன்னெடுக்க முடியாது போனமையினால். மீண்டும் அப்பணி முடிவடைந்ததும் அக்குழுவை அனுப்பி விசாரணையினை மேற்கொண்டு, மீண்டும் இன்னுமொரு நாள் தேவைப்பட்மையின் காரணமாக மீண்டும் ஒருநாள் விசாரணையினை மேற்கொண்டு 23.02.2017ம் திகதி இப்பிரச்சினை சம்பந்தமான அறிக்கையினை மாகாண கல்வி பணிப்பாளருக்கு சமர்ப்பித்து விட்டேன் எனவும், என்னுடன் இப்பாடசாலை தொடர்பாக தொடர்புகொண்டு எதுவும் வினவாது வலயக்கல்வி பணிப்பாளரும் உடந்தையாக உள்ளார் என்னும் சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றது என்னும் செய்தியினை வெளியிட்டமை என்னை மிகவும் கவலையடைய வைக்கின்றது எனவும் தெரிவித்தார். 

SHARE

Author: verified_user

0 Comments: