நகர அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் எறாவூர் நகர விஸ்தரிப்புப் பணிகள் 888 மில்லியன் ரூபாய் செலவில் அடுத்த திங்களன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஸ்ரீலமுகா மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு
இணைத் தலைவருமான அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.
இது தொடர்பாக புதன்கிழமை விவரம் தெரிவித்த அவர்@ ஏறாவூர் நகர பிரதான நெடுஞ்சாலை அகலமாக்கும் பணிகளின் முதற்கட்டம் அடுத்த திங்களன்று (20.02.2017) ஆரம்பிக்கவுள்ளது.
இந்த அபிவிருத்தித் திட்டத்திற்கென நகர அபிவிருத்தி அமைச்சர் றவூப் ஹக்கீம் 888 மில்லியன் ரூபாவை தனது அமைச்சிலிருந்து ஒதுக்கித் தந்துள்ளார்.
உடனடியாக வேலைகள் ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விபத்துக்களைத் தவிர்க்கும் முகமாக ஏறாவூர் நகர நெடுஞ்சாலை அகலமாக்கும் வேலைத் திட்டத்தில் வர்த்தகர்கள், குடியிருப்பாளர்கள், உள்ளுராட்சி நிருவாகம், அதிகாரிகள் பொதுமக்கள், கடை உரிமையாளர்கள் என எல்லோரும் இணைந்து ஏறாவூரை அழகான அபிவிருத்தி செய்யப்பட்ட நகரமாக மாற்ற ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
ஏறாவூரில் யுத்த அடையாளங்கள் இன்னமும் இருந்து கொண்டிருக்க நாம் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
இவ்வாறு நகரம் இந்தத் திட்டத்தின் கீழ் விசாலமாக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படுவதால் குறைந்தபட்சம் அடுத்த கால் நூற்றாண்டுக்கு (25 வருடங்களுக்காவது) போக்குவரத்து நெருக்கடி காரணமாக விபத்துக்களைத் தவிர்த்துக் கொள்ளும் நகரமாக ஏறாவூரை மாற்ற முடியும்” என்றார்.
0 Comments:
Post a Comment