மட்டக்களப்பு பெரிய போரதீவு – பழுகாமம் வீதி தற்போது கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் காணி அபிவிருத்தி மகளிர் விவகாரம் திறன் அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் மூலம் நிதி ஒதுக்கப்பட்டு புனரமைக்கப்பட்ட வீதியானது கடந்த 28.12.2016ம் திகதி அவசர வேலையாக முடிகப்பட்டு மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. இவ்வீதியானது வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவ்வீதியானது தற்போது மீள்புனரமைப்பு செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றது. 50நாட்கள் கடந்துள்ள நிலையில் இந்த வீதியானது இவ்வாறு பாதிப்புக்குள்ளானால் எத்தனை வருடங்களுக்கு இது பாவனைக்குட்படுத்தபடும் என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். ஆகவே சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளும், அரசியல் வாதிகளும் இதனை தங்கள் கவனத்தில் கொள்ளுமாறும் மக்கள் வேண்டுகொள் விடுத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment