விருட்சம் சமூக மேம்பாட்டு அமையத்தினால் 38 ம் கிராம அகத்தியர் வித்தியாலத்திற்கு குடிநீர் குழாய் வசதி வழங்கிவைப்பு
வெல்லாவெளி பிரதேசத்துக்குட்பட்ட மட்/பட்/மண்டூர் 38
ம் கிராம அகத்தியர் வித்தியாலத்திற்கு விருட்சம் சமூக மேம்பாட்டு அமையத்தினால் குடிநீர் குழாய் வசதி ஏற்படுத்தப்பட்டு வழங்கிவைக்கப்பட்டது.
விருட்சம் சமூக மேம்பாட்டு அமையத்தின் தலைவர் யோ.சந்ரு தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வருகை தந்த தமிழ் மருத்துவ அறிஞர் நிறுவன
(MIOT - UK) பிரதிநிதி Dr.N. காந்தா அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன் பாடசாலை அதிபர், ஆசிரியர், கல்விச் சமூகத்துடன் அப்பிரதேச கல்வி நிலை தொடர்பிலும் எதிர்கால கல்வி வளர்ச்சிக்கான திட்டங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment