17 Feb 2017

திகதி மாற்றம் : 20.02.2017 கிழக்கு மாகாணப் பட்டதாரிகள் 222 பேர் ஆசிரியர்களாக நியமனம்

SHARE
கிழக்கு மாகாணத்தில் வேலையற்றிருக்கும் பட்டதாரிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மேலும் ஒரு தொகுதியினர் ஆசியர்களாக நியமிக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர்
செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (17.02.2017) காலை 9.30 மணிக்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணி தலைமையில் திருகோணமலை உவர்மலை விவேகானந்தாக் கல்லூரியில் இடம்பெறவிருந்த நிகழ்வு தவிர்க்க முடியாத காரணங்களால் எதிர்வரும் திங்கட்கிழமை 20.02.2017 பிற்போடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

ஆசிரியர் நியமனத்திற்காக தேர்வெழுதியவர்களில் 40 புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்கள் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டு அவர்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 222 பேருக்கு இந்த ஆசிரியர் நியமனங்கள் கிடைக்கின்றன.

இதில் தமிழ் மொழி மூலப் பட்டதாரிகள் 164 பேரும் சிங்கள மொழி மூலப் பட்டதாரிகள் 58 பேரும் நியமனங்களைப் பெறுகின்றனர்.

இதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் நிலவும் வேலையில்லாப் பட்டதாரிகளின் பிரச்சினையையும் கிழக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையையும் ஓரளவுக்காவது நிவர்த்திக்க வாய்ப்பேற்பட்டுள்ளதாக முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: