(டிலா)
மருதமுனை “ஸம்ஸ் அல்-2000” சமூக அமைப்பு ஏற்பாடு செய்த 10வது ஆண்டு நிறைவு நிகழ்வும் சேவைநலன் பாராட்டு விழாவும் (25.02.2017) கலாசார மத்திய நிலையத்தில் அமைப்பின் ஆலோசகரும் ஓய்வு நிலை அதிபருமான ஏ.எம்.ஏ சமட்
தலைமையில் நடைபெற்றது. நிகழ்விற்கு விசேட அதிதியாக கல்முனை பொலிஸ் நிலைய நிருவாகப் பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன், கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.சி.அன்சார், மருதமுனை கொட்டுன் பாக் நிறுவனத்தின் முகாமையாளர் எம்.எம்.நில்பான், பிரதம அதிதியாக சரோ பாம் முகாமைத்துவ பணிப்பாளர் எம்.எச்.எம்.தாஜுத்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இங்கு சமூகத்திற்காக தம்மை அர்ப்பணித்த சமூக சேவையாளர்கள் (10 பேர்) விருது வழங்கி பொன்னாடை போர்தி கௌரவிக்கப்பட்டாா்கள். அமைப்பின் தலைவர் எம்.எச்.எம்.றம்ஸாத் சமூக சேவையாளர் (தோழர் இஸ்மயில்) அவர்களினால் பொன்னாடை போர்தி கௌரவிக்கப்பட்டாா். அத்துடன் அமைப்பின் உறுப்பினர்கள் (65 பேர்) அதிதிகளின் கரத்தினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டாா்கள்.
“ஸம்ஸ் அல்-2000” சமூக அமைப்பின் குடும்பத்தில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள். “ஸம்ஸ் அல்-2000” சமூக அமைப்பின் குடும்ப சின்னஞ் சிறாா்களின் கலை நிகழ்வுகளும் இங்கு அரங்கேற்றப்பட்டன.
இறுதியில் நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளின் உன்னத சேவையை பாராட்டி “ஸம்ஸ் அல்-2000” சமூக அமைப்பினர் அதிதிகளுக்கு விருது வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பிறை எப்.எம்.அறிவிப்பாளர் நஜிமுத்தீன் எம்.ஹஸ்ஸான் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார். “ஸம்ஸ் அல்-2000” சமூக அமைப்பினர் அறிவிப்பாளர் நஜிமுத்தீன் எம்.ஹஸ்ஸானுக்கு சிறந்த அறிவிப்பாளர் விருது வழங்கி கௌரவித்தனர்.
0 Comments:
Post a Comment