3 Dec 2016

மட்டக்களப்புக்கு ஞானசாரர் வருகை எதிரொலி: வெறுப்புணர்வைத் தூண்டும் சட்ட ரீதியற்றஒன்று கூடலைத் தடுக்கும் தடை உத்தரவுபிறப்பிப்பு

SHARE
வெறுப்புணர்வைத் தூண்டும் சட்ட ரீதியற்றஒன்று கூடலைத் தடுக்கும் தடைஉத்தரவொன்றை ஏறாவூர் சுற்றுலா நீதிவான்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மாலை (02.12.2016)பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவையும் மீறி வெறுப்புணர்வைத்தூண்டும்சட்ட ரீதியற்ற ஒன்று கூடல்நிகழுமாயின் சட்ட நடவடிக்கைஎடுக்கப்படும் என்றும்அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பிலுள்ள மங்களராமவிஹாரைக்கு விஜயம் செய்யும் பொதுபலசேனா அமைப்பின் ஞானசார தேரர்தலைமையிலான குழுவினர் ஏறாவூர் நகரம்புன்னைக்குடா மற்றும் ஏறாவூர்ப்பற்றுப்பிரதேசத்தை அண்டிய பதுளை வீதியில்அரச மரம் உள்ள தனியார்காணியொன்றுக்குள் செல்வதாகவும்நிகழ்ச்சி நிரல் இடப்பட்டுள்ளது.

இதனைக் கருத்திற் கொண்டு பிரதேசத்தில்ஆர்ப்பாட்டங்களும்இனவெறுப்புணர்வுகளைத் தூண்டும்சம்பவங்களும் இடம்பெறலாம் என்பதால்கரடியனாறு பொலிஸார் அமைதிக்குப்பங்கம் ஏற்படுத்தி வெறுப்புணர்வைத்தூண்டும் ஒன்று கூடலுக்குத் தடைவிதிக்குமாறு நீதி மன்றத்தைவேண்டியிருந்தனர்.


மனுவை ஆராய்ந்த  மாவட்ட பதில் நீதிபதிஆதம்லெப்பை முஹம்மத் முனாஸ்வெறுப்புணர்வைத் தூண்டும் சட்ட ரீதியற்றஒன்று கூடலைத் தடுக்கும் தடைஉத்தரவைத் பிறப்பித்தார்.

மட்டக்களப்பு மங்களராமய விஹாராதிபதிஅம்பிட்டிய சுமணரத்ன தேரர், ஏறாவூர்ப்பற்று செங்கலடி 

 பதுளை வீதியிலுள்ளபன்குடாவெளியில் அரச மரம் உள்ளகாணிக்குள் கடந்த 16.11.2016 அன்று அத்துமீறிநுழைந்து விஹாரை கட்ட முனைந்ததால்அங்கு பதற்றமான சூழல் நிலவியது.


அந்த அரச மரம் உள்ள இடத்தில் புத்த மதஅடையாளங்கள் காணப்படுவதாகவும்கடந்த காலங்களில் பௌத்தவழிபாட்டுத்தலம் அங்கு இருந்ததாகவும் கூறிசர்சைக்குரிய அம்பிட்டிய  சுமணரத்ன தேரர்தனியார் காணிக்குள் அத்துமீறி நுழைந்துஅமர்ந்து கொண்டதால் இந்த பதற்ற நிலைஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
SHARE

Author: verified_user

0 Comments: