ஆசிரியர்கள் கற்பிக்கும் போது பிரம்பு இல்லாமல் அக்காலத்தில் கற்பிப்பதில்லை, அவ்வாறு பிரம்பு இருந்தாலும் சிலர் அடிப்பதும் இல்லை. ஆனால் கையில் பிரம்பு இருக்கும் அதனால்தான் அன்று அவ்வாறான
ஆசிரியர்களிடம் படித்தவர்கள் இன்று உயர்ந்த பதவிகளில் இருந்து கொண்டிருக்கின்றனர். அதேநேரம் இன்றும் அன்று கற்பித்ததை நினைவில் வைத்துள்ளனர். என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.
மண்முனை தென்மேற்கு கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்று புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களை கௌரவித்து பரிசில் வழங்கி வைக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (02) கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற போது அதில் முதன்மை அதிதியாக கலந்து உரையாற்றுகையிலே இதனை குறிப்பிட்டார்.
ஆசிரியர்கள் கவர்ச்சிப்பொருளாக இருக்க வேண்டும் அப்போதுதான் மாணவர்களும் அவர்களது கற்பித்தல் மீது விரும்பு கொள்வர். கிளியைப் பார்த்து அதன் கழுத்தில் அம்பை விடுமாறு துரோணச்சாரியார் குறிப்பிட்ட போது பலரும் கிளிக்கு அம்பு விடுவதற்கு எத்தணித்த போது அவ்விடத்தில் ஒவ்வொருவரிடமும் மரம் தெரிகிறதா? கிளை தெரிகிறதா? கிளிதெரிகிறதா? என்று கேட்டபோது ஆம் என்று பதில் சொல்லுகையில் அவர்களிடம் அம்பை வாங்கி விட்டு அவர்களை துரோணச்சாரியார் அனுப்புகிறார்.
ஆனால் அருச்சுனனிடம் மரம் தெரிகிறதா? கிளைதெரிகிறா? கிளிதெரிகிறதா? என்று கேட்டபோது தெரியவில்லை என்றான். அப்போ என்ன தெரிகிறது என்று கேட்க கிளியின் கழுத்து தெரிகிறது என்றான். அப்போ அம்பைவிடு என்றார் அதன்மூலம் கிளியின் கழுத்து துண்டிக்கப்பட்டது. ஆகவே மாணவர்களது இலக்கும் அருச்சுனனனையே போன்றே அமைய வேண்டும்.
மேலும் இலங்கையிலே கல்விப்பொதுத்தராத உயர்தரத்திற்கு பலர் தோன்றினாலும் பல்கலைக்கழக அனுமதிக்காக குறைந்த அளவினரையே உள்வாங்குகின்ற நிலை இருந்து கொண்டிருக்கின்றது. இதற்காக தொழிநுட்ப பாடங்கள் பலவற்றை கொண்டுவருவதற்கு அரசு முயற்சித்துக் கொண்டிருக்கின்றது என மேலும் கூறினார்.
0 Comments:
Post a Comment