3 Dec 2016

மட்டக்களப்பு தேரர் ஆர்ப்பாட்டத்திற்குமுஸ்தீபு பொலிஸார் தடுப்பு பதற்றமானசூழல் (வீடியோ)

SHARE
வெறுப்புணர்வைத் தூண்டும் சட்ட ரீதியற்ற ஒன்று கூடலைத் தடுக்கும் தடை உத்தரவு மட்டக்களப்பு மாவட்டத்தில் பிறப்பிக்கப் பட்டிருக்கின்ற
 வேளையிலும் மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டம் நடாத்த அங்குள்ள பிக்கு சனிக்கிழமை பிற்பகல்முயற்சி மேற்கொண்டதால் மட்டக்களப்புநகரில் சற்று பதற்றமான சூழ்நிலைகாணப்பட்டது.

மட்டக்களப்பிலுள்ள மங்களராமவிஹாரைக்கு பொதுபல சேனா அமைப்பின்ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் மேற்கொள்ள முயற்சித்த வேளையில் அவரதுபயணம் மட்டக்களப்பு பொலொன்னறுவை மாவட்டங்களின் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இவ்வேளையிலேயே மட்டக்களப்பு மங்களராமய விஹாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மட்டக்களப்பு நகரில்ஆர்ப்பாட்டத்திற்கு முயற்சித்த வேளையில் பொலிஸார் முழுமூச்சாக குறித்த ஆர்ப்பாட்டத்தைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து மங்களராம விஹாரையைசூழ விருந்த கடைகள் பூட்டப்பட்டன.பயணிகள் பதற்றமடைந்தனர்.போக்குவரத்து சேவையும் சற்று நேரம்பாதிக்கப்பட்டது.





SHARE

Author: verified_user

0 Comments: