5 Dec 2016

டெங்கு நோயாளிகள் பப்பாசிச் சாற்ரை குடிக்க வேண்டாம் - வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எப்.ரஹ்மான்

SHARE
(டிலா)
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் பப்பாசிச் சாற்ரை குடித்துக் கொண்டு வைத்தியசாலைக்கு வருகின்றனர். இதனை செய்ய வேண்டாம் என இந்த தாய்மார்கள் மத்தியில் கேட்டுக்கொள்கிறேன் என கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எப்.ரஹ்மான் தெரிவித்தார்.
மருதமுனை சைல்ட் பெஸ்ட் (Child First ) ஆங்கிலக் கல்லூரியின் வருடாந்த கலை கலாசார மற்றும் பரிசளிப்பு நிகழ்வு என்பன அல்-மனார் மத்திய கல்லூரியில் சைல்ட் பெஸ்ட் கல்லூரியின் தலைவரும் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி.ஏ.எம்.எம்.நவாஸ் தலைமையில் (02.12.2014) நடைபெற்றது. இங்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே வைத்திய அத்தியட்சகர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து இங்கு உரையாற்றும் போது;

இன்று எமது பிரதேசத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகின்றன. டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அதன் அறிகுறிகளை அறிந்தவர்கள் பப்பாசி சாற்ரை குடித்துக் கொண்டு எமது வைத்தியசாலைக்கு வருகின்றனர். ஆதாரம் இல்லாத விசயத்தை செய்ய வேண்டாம். இது தற்போது ஆய்விலுள்ள விடயமாகும். அங்கிகாரம் பெறுவதற்கு அல்லது மருத்துவத் துறையில் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு இன்னும் பல படிநிலைகளை தாண்ட வேண்டும்.

அவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்டால் எமக்கும் அதற்குரிய மாத்திரைகள் கிடைக்கும். அவர் சொல்கிறார், இவர் சொல்கிறார் என்பதற்காக எதனையும் செய்ய வேண்டாம். பின்னர் அது ஆபத்தான நிலையை ஏற்படுத்தும்.

தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களிலயே டெங்கு நுளம்புகள் உருவாகின்றன. வீட்டுச் சூழலில் முடிந்தளவு தண்ணீர் தேங்கி நிற்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். இதற்கு வீட்டிலுள்ள சிறார்களை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். பெரியவர்களை விட சிறுவர்கள் வீட்டுச் சூழலை சுத்தப்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

சிறுவர்கள் பாடசாலைக்கு செல்லும் போது, டெங்கு நுளம்புகளை விரட்டக்கூடிய நிறைய ஒயில் வகைகள் இன்று சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. இவைகளை வாங்கி சிறுவர்களின் ஆடைகளில் பூசிவிடுவதன் மூலம் டெங்கு நுளம்புகளை விரட்ட முடியும் என்றார்.

நிகழ்வில் சத்திர சிகிச்சை வைத்திய நிபுணர் டாக்டர் சித்தீக் ஜெமீல், கல்முனை கபீப் வங்கி முகாமையாளர் ஏ.எல்.அன்வர்டீன், தெ. கி.பல்கலைக்கழக பொறியியல் பீடாதிபதி எஸ்.எம்.ஜூனைத்தின், முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம்.ஜெமீல் உட்பட பலர் கலந்து இதில் கொண்டனர்.
SHARE

Author: verified_user

0 Comments: