அடுத்தவருடம் (2017) பெப்ரவரி மாதம் நீர் விநியோகத்தில் எழுகின்ற பிரச்சினைகள் அனைத்தும் தீர்கப்படும் என தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு அதிகார சபையின் களுவாஞ்சிகுடி பிரதேச அலுவலகத்திற்கு பொறுப்பான உத்தியோகத்தர் ஏ.ஜெகதீபன் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக களுவாஞ்சிகுடி பிரதேச அலுவல எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும் நீர் திடிரென நிறம் மாற்றம் ஏற்படுவது சம்பந்தமாக பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற கருத்துகள் தொடர்பாக புதன் கிழமை (07) வினாவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் இவ்விடையம் தொடர்பில் தெரிவிக்கையில்…
எமது பிரதேசம் சன அடர்த்தி கூடிய பிரதேசமாகும் இப்பிரதேசத்திற்கு முழுமையாக நீர்வழங்குவதற்கு நீர்பற்றாக்குறையாக உள்ளது. இதனாலையே நீரினை நாங்கள் குறித்த நேரத்தில் மாத்திரம் வழங்கி வருகின்றோம். அவ்வாறு இடைவிட்டு நீரினை வழங்குவதாலையே நீரில் இந்த நிறமாற்றம் இடம் பெறுகின்றது. இதற்காக மக்கள் குழம்பவேண்டிய அவசியமில்லை வேண்டாம் அனைத்து நீர் விநியோகமும் பரிசோதனையின் பின்னரே வழங்கப்படுகின்றது.
தொடர்ச்சியாக நீர் வழங்க் கூடிய நிலமை ஏற்படும் பட்சத்தில் இவ்வாறான நிலமை ஏற்படாது. தொடர்ச்சியாக நீரினை அடுத்த வருடம் வழங்க முடியும் காரணம் சடயத்தலாவையில் தண்ணீரை பெறுவதற்கான பூர்வாங்க வேலைகள் முன்னெடக்கப்படுகின்றன இது எதிர்வரும் பெப்ரவரி மாதம் நிறைவடையும் அதன் பின்னர் தங்கு தடையின்றிய நீர்விநியோகத்தினை வழங்க முடியும் என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment