1 Nov 2016

சிறுபான்மையினரை அச்சுறுத்தும் செயற்பாடுகள் நல்லாட்சியிலும் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் தோன்றியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

SHARE
இறக்காமம் மாணிக்கமடு பகுதியில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விவகாரம்  தொடர்பில் திங்கட் கிழமை ஊடகங்களுக்கு திங்கட் கிழமை (31) அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையியே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  இவ்வாறு  தமிழ் முஸ்லிம் மக்கள் பாரம்பரியமாக வாழும்  இடங்களில் புத்தர்  சிலைகளை  வைத்து  அவர்களின்  இயல்பு வாழ்க்கைக்கு குந்தகம் விளைவிக்கும்செயற்பாடுகள் திட்டமிட்ட வகையில் மேற்கொள்வது கண்டிக்கத்தக்க விடயமாகும்.



இந்த சம்பவம் தொடர்பில்  அம்பாறை மாவட்ட நல்லாட்சியில் அங்கம் வகிக்கும் பெரும்பானமையின அரசியல்வாதிகள் மௌனம்  சாதிப்பது மக்கள் பிரதிநிதிகளான அவர்களின்  நேர்மை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன.

தமிழ்  முஸ்லிம் மக்கள்  அனைவருடனும்  அமைதியாகவும் சமாதானமாகவும்  வாழவே விரும்புவதாகவும்   தமது  அரசியல் சுயலாபத்திற்காக அதனை சீர்குலைக்க விரும்பும் சிலரே இவ்வாறான சதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப் படுகின்றன



கடந்த அரசாங்கத்தின் ஆட்சியாளர்களின்  மறைமுக சக்திகள்  இவ்வாறான நடவடிக்கைகளை  முன்னெடுத்து நல்லாட்சி மீதான சிறுபான்மையினரின் நம்பிக்கைகளை சீர் குலைக்க முற்படுவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டுள்ளார்
SHARE

Author: verified_user

0 Comments: