27 Nov 2016

மாவீரர் தின பிரசுரங்கள் மட்டக்களப்பில் பரவலாக விநியோகம்

SHARE
மட்டக்களப்பில் மாவீரர்களை மகிமைப்படுத்தி மாவீரர் தினத்தன்று (27.11.2016) மட்டக்களப்பு தமிழ் சமூகம் என்று உரிமை கோரப்பட்டு பிரசுரங்கள் பரவலாக விநியோகிக்கப்பட்டுள்ளன. 
அநாமதேயமாக விநியோகிக்கப்பட்டுள்ள அந்தப் பி;ரசுரங்களில் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது@ 

“மாவீரர் தெய்வங்கள் மகத்தான தியாகிகள்
மண்மீட்பு போரின்பால் உயிர் நீத்த புனிதர்கள்
எண்ணற்ற பணி செய்து இனம் வாழ வைத்தவர்கள்
கண்மூடித் தூங்குகின்ற கடமையுணர்வாளர்கள்
கார்த்திகைத் தீபங்கள்  கலங்கரை விளக்குகள்
காலத்தால் அழியாத கரிகாலன் வீரர்கள்
ஈழத்தில் தமிழ் வாழ எமக்காக உழைத்தவர்கள்
நேருக்குப் போர் செய்து நிலம் காத்த உத்தமர்கள்
தேசத்தின் விடுதலைக்காய் தேகத்தை அர்ப்பணித்தோர்
தாகமே தமிழ் என்று தமது மூச்சில் உச்சரித்தோர்
இலட்சியக் கனவுகளை ஏந்தி நிற்கும் தீப்பொறிகள்
இடி மின்னல் அடித்தாலும் இலக்குமாறா எறிகணைகள்
இனம் காக்க வீழ்ந்திட்ட இலட்சிய வீரர்களை
மறக்கலாமா தமிழினமே மாவீரர் நினைவுகளை
மனதார தீபமேற்றி மரியாதை செய்திடுவோம்
மாவீரர் நாளதனை மறக்காமல் போற்றிடுவோம்
மட்டக்களப்பு தமிழ் சமூகம்

SHARE

Author: verified_user

0 Comments: