மாவீரர் தின நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (27) மாலை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்புக் காரியாலயத்தில் உணர்வு பூர்வமாக அனுஸ்ட்டிக்கப்பட்டது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசயாக அமைச்சர் கி.துரைராசசிங்கம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன் உள்ளிட்ட கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது உயிர் நீத்த மாவரர்களுக்காக அங்கு அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபிக்கு அலரஞ்சலி செலுத்தப்பட்டன. பின்னர் ஈஐகச் சுடர்களை கலந்து கொண்டிருந்த அனைவரும் ஏற்றியதுடன் மாவீரர் தின நினைவுனைகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment