மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரெத்தின தேரரின் செயற்பாடானது எமது தமிழ் மக்களையும், என்னைப்போன்ற தமிழ் அரசியல்வாதிகளையும், கோபத்தில் ஆழ்த்தி எம்மைச் சீண்டுவதாக அமைகின்றது.
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மவாட்டத்தைச் சேர்ந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்க்கண்டு நடராசா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் இற்றைக்கு 50 வருடங்களுக்கு மேலாக எல்லைப் பகுதியிலுள்ள மேச்சல்தரைப் பிரதேசத்தில் கால்நடைகளை வளர்த்து தமது ஜீவநோபாயத்தை மேற்கொண்டு வருகின்ற இந்நிலையில் இதனைத் தடுத்து நிறுத்த வேண்டும் மேச்சல்தரைப் பகுதிகளைக் பகிர்ந்து அவற்றை சிங்கள மக்களுக்கு வழங்க வேண்டும் எனக்கோரி மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரெத்தின தேரர் தலைமையில் அம்பாறை – கண்டி வீதியை மறித்து கெவுளியாமடு எனும் இடத்தில் வெள்ளிக்கிழமை (11) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்விடையம் குறித்து திங்கட் கிழமை கிழமை (14) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….
புத்தரின் போதனைகளைப் பரப்பக்கூடிய புத்த மதகுரு தற்போது புத்தரின் புனித்தத் தன்மையைக் கேள்விக்குறியாக்கும் வித்திலே மதம் பிடித்த மனிதனாக மாறி அரச அதிகாரிகளை அதட்டுகின்ற நிலமை ஏற்பட்டுள்ளமையை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
மதம் பிடித்த குறித்த புத்த மதகுரு ஒருசில பெரும்பான்மையின மக்களை ஒன்றிணைத்து, அவர்களுக்கு காணி வழங்குமாறும், அவர்கள் அத்துமீறி கையகப்படும்திய மேச்சல்த்தரைக்கான காணிகளை நிரந்தரமாகவே அம்மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும், பட்டிப்பளைப் பிரதேச செயலாளரையும். கெவுளியாமடு கிராம சேவையாளரையும், மிரட்டியுள்ளார்.
தமிழர்களெல்லாம் புலிகள் எனவும், நான் சொல்வதைத்தான் செய்ய வேண்டும் எனவும், வற்புறுத்தியும், தகாத வார்த்தைப் பிரயோகங்களைப் பாவித்து அச்சுறுத்தியுள்ளார்.
இச்செயற்பாடானது அனைத்து தமிழ் மக்களுக்கும், அதிகாரிகளுக்கும், நீதியை நிலைநாட்டும் பொலிஸ் அதிகாரிகளுக்கு முன்னிலையில் நடைபெற்றமையானது, பொலிசார் அவர்களது கடமையிலிருந்து தவறிளைத்ததாகவே நான் கருதுகின்றேன்.
இவ்வாறான சம்பவங்கள் இப்பிக்குவால் ஏற்கனவேயும், மட்டக்களப்பில் அரங்கேறியிருக்கின்றன. எனவே இவ்வாறானவர்களின் செயற்பாடானது எமது தமிழ் மக்களையும், என்னைப் போன்ற தமிழ் அரசியல் வாதிகளையும், கோபத்தில் ஆழ்த்தி எம்மைச் சீண்டுவதாக அமைகின்றது.
இந்த பிக்குவின் தொடர்ச்சியான இச்செயற்பாடுகள் இந்த நல்லாட்சிக்கு எதிராக செயற்படத் தூண்டுவதாகவே நான் இதனைப் பாரக்கின்றேன். எனவே இவ்விடையம்குறித்து உடனடியாக நியான முறையில் விசாரணைகள் செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதனூடாக எமது சகோதர இனங்களுக்கிடையிலான முறுகலை மேலும் வராமல் தவிர்க்க முடியும் எனக் கருதுகின்றேன். என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment