இவ்வீதிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியை உரியமுறையில் பயன்படுத்துவதற்கு இந்தக் கிராமத்தின் பொது அமைப்புக்களும் கவனம் செலுத்த வேண்டும். மிக
நிண்டகாலமாக கவனிப்பாறற்றுக் கிடந்த இவ்வீதியை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முயற்சியின் பயனாக தற்போது இவ்வீதி புணரமைப்புச் செய்யப்படுகின்றது.
என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான மா.நடராசா, ஞா.கிருஸ்ணபிள்ளை ஆகியோரின் முயற்சியினால், 15603172.95 ரூபா நிதி ஒதுக்கீட்டில் 1.55 கிலோமீற்றர் வுpதி புணரமைப்புச் செய்யப்படவுள்ள போரதீவு – பழுகாமம் வீதியின் புணரமைப்பு வேலைகளை வெள்ளிக்கிமை (04) ஆரம்பித்து வைத்துவிட்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….
இவீதிப் புணரமைப்புக்கு ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ள நிதியை உரியமுறையில் பயன்படுத்தி உரிய தரத்துடன் புணரமைப்புச் செய்யப்பட வேண்டும். இதில் வீதி அபிவிருத்தித் திணைக்கள அதிகாரிகள் மாத்திரமின்றி பொதுமக்களும் கவனம் செலுத்த வேண்டும்.
படுவான்கரைப் பகுதியிலுள்ள மக்கள் மாத்திரமின்றி ஏனையோரும் பயன்படுத்தும் இவ்வீதியின் புணரமைப்பு வேலைகளை ஒப்பந்தக்காரும் இவ்வேலைகள் சீராக முன்நெடுக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
பெரியபோரதீவு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் த.சிவயோகராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மகாணசபை உறுப்பினர் மா.நடரசா வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிறைவேற்றுப் பெறியியலாளர் வி.நவரெட்ணராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment