6 Nov 2016

வலிந்து உருவாக்கப்பட்ட சமாதான செயற்பாடுகள் நீடித்து நிலைக்கப்ப போவதில்லை. ஏறாவூர் நகர உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. றமீஷா

SHARE
வலிந்து உருவாக்கப்பட்ட சமாதான செயற்பாடுகள் நீடித்து நிலைக்கப் போவதில்லை என ஏறாவூர் நகர உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. றமீஷா தெரிவித்தார்.
“எல்லைகளைக் கடந்த இளைஞர் சமூகம்” என்ற இளந் தலைவர்களின் கொள் திறனை விருத்தி செய்யும் இளைஞர் பரிமாற்று வேலைத் திட்ட நிகழ்வு ஞாயிறன்று (06.11.2016) ஏறாவூர் கனிஷ்ட வித்தியாலயத்தில் இடம்பெற்றபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்@ 

இளைய சமுதாயத்தினரிடையே சமாதானம் பற்றிய விழிப்புணர்வு தேiவான காலகட்டமாக இது உள்ளது.

கிளிநொச்சி காலி மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை இணைத்ததாக தமிழ் முஸ்லிம் சிங்கள சமூக இந்தப் இளைஞர் பரிமாற்று வேலைத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

உருவாக்கப்பட்ட சமாதான செயற்பாடுகள் ஒருபோதும் நீடித்து நிலைக்கப் போவதில்லை. அது புரிந்துணர்வுடனும்  இதய சுத்தியுடனும் சகோரவாஞ்சையுடனும் மனிதாபிமானத்துடனும் உருவாக வேண்டும்.

உருவாக்கப்பட்ட சமாதானத்திற்குள் கசப்பான உணர்வுகள் மனதின் அடி ஆழத்தில் விரவிக் கிடக்கின்றன. அது களையப்பட வேண்டும்.
முழுமையான சமாதானத்தை நாட்டு மக்கள் அனைவரும் இன மத பேதங்களைக் கடந்து அனுபவிக்க வேண்டும். அதற்கு இளைய சமுதாயத்தினரின் பங்கு இன்றியமையாதது. இதனைக் கருத்திற் கொண்டு இலங்கை அபிவிருத்திக்கான உதவு ஊக்க மையம் (ளுசiடுயமெய ஊநவெசந கழச னுநஎநடழிஅநவெ குயஉடைவையவழைn) தமிழ் சிங்கள முஸ்லிம் சமூக இளையோரை இணைத்து அந்தந்த சமூகங்களின் மத கலாசார பண்பாட்டு விழிமியங்களுக்கு மதிப்பளித்து இத்தகைய“எல்லைகளைக் கடந்த இளைஞர் சமூகம்” என்ற இளந் தலைவர்களின் கொள் திறனை விருத்தி செய்யும் இளைஞர் பரிமாற்று வேலைத் திட்டத்தினை அமுல்படுத்தி வருகின்றது. காலத்தின் தேவை கருதிய இந்த முயற்சி பாராட்டப்பட வேண்டும்.

சமூகத்திலே மிக முக்கியமான பெறுமதி மிக்க பாத்திரப் பங்கை வகிப்பவர்கள் இளைஞர்கள். இளைஞர்கள் மத்தியிலே புரிந்துணர்வும் மனிதாபிமானமும், சகவாழ்வும் நிலவுமாகில் அது நாட்டின் சமாதானத்தை உறுதிப்படுத்தக் கூடியதாக இருக்கும்.

பல்லினங்கள் வாழ்கின்ற இந்த நாட்டில் இனங்களை இணைக்கும் இத்தகைய முயற்சிகள் தொடர வேண்டும்.

இளைய சமுதாயத்தினரின் மத்தியில் சமாதானம் நிலவுமாக இருந்தால் நாட்டின் அமைதியை உறுதிப்படுத்த முடியும்.

இனம், மதம், மொழி வேற்றுமைகளைக் கடந்த சமாதானமே நிரந்தர அமைதிக்கு வழிவகுக்கும்.

ஒரு சமூகத்தின் மத, கலாசாரப் பண்பாட்டு விழுமிய அம்சங்களைத் தவறாகப் புரிந்து கொள்கின்றபோது அங்கே அமைதியீனம் உருவாகி அதன் பின்விளைவாக பிரதேசமும் நாடும் அழிவைச் சந்திக்கும்.

முரண்பாடுகளின் மொத்த வடிவமாக இளைஞர்களை உருவாக்காது ஐக்கியத்தினதும் அமைதியினதும் ஆணிவேர்களாக இளைய சமுதாயத்தை பண்படுத்தி பராமரித்து பாதுகாத்து வளர்த்தெடுப்பதே காலத்தின் Nவையாகும்” என்றார்.

இந்நிகழ்வில் இலங்கை அபிவிருத்திக்கான உதவு ஊக்க மையத்தின் இணைப்பாளர் ஏ. சொர்ணலிங்கம், மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உதவிப் பணிப்பாளர் எம்.என். நைறூஸ், ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் உட்பட பல்சமய பிரமுகர்கள், கிளிநொச்சி, காலி, மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்கள், ஹெல்விற்றாஸ் (ர்நடஎவையள) எனும் சர்வதேச தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

SHARE

Author: verified_user

0 Comments: