மட்டக்களப்பு மாவட்டத்தின் மீள்குடியேற்றப் பிரதேசங்களில் கடமையாற்றும் கணக்காளர்களுக்கு மடிக்கணணிகள் (08) செவ்வாய்க்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.
மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அரசாங்க அதிபர் திருமதி. பி.எஸ்.எம் சார்ள்;ஸ் தலைமையில் நடைபெற்ற இவ்வருடத்திற்கான அபிவிருத்தி திட்டங்களுக்கான மீளாய்வுக் கூட்டத்தின் இறுதியிலேயே இவ் மடிக்கணணிகள் வழங்கவைக்கப்பட்டன.
இதன் போது, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன் உள்ளிட்டோரும் பங்கு கொண்டதுடன், பிரதேச செயலாளர்கள், பிரதி , உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், கணக்காளர்கள், உள்ளிட்டஉத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
மீள்குடியேற்றப் பிரதேசங்களான ஏறாவூர் பற்று, மண்முனை மேற்கு, மண்முனைப் பற்று, மண்முனை தென் எருவில் பற்று, மண்முனை தென்மேற்கு, போரதீவுப் பற்று, கோரளைப்பற்று, கோரளைப்பற்று தெற்கு, கோரணைப்பற்று வடக்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளின் கணக்காளர்ககுக்கே இவ் மடிக்கணணிகள் வழங்கப்பட்டன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஐந்தாண்டு அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டத்தினால் இக் கணணிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment