சாரதிகள் மதுபோதையின்றி வீதி போக்குவரத்து விதிகளை பின்பற்றி வாகனத்தை செலுத்தும் பட்சத்தில் வீதி விபத்துக்களை குறைத்து நகரத்ததை காப்பாற்ற முடியும் என களுவாஞ்சிகுடி பிராந்திய உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் பீ.ரி.சிசிர தெரிவித்தார்.
வீதி போக்குவரத்து சம்பந்தமாக களுவாஞ்சிகுடி முச்சக்கரவண்டி சங்கத்தினருடனான சந்திப்பு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் ஞாயிற்றுக் கிழமை (06) நடைபெற்றது நடைபெற்றது. இதில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ஆர்எஸ்.எம்.ரத்நாயக்க ஏனைய பொறுப்பதிகாரிகளும் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள் என பலர் கலந்து கொண்டனர். இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்…..
தற்காலத்தில் விபத்துக்களின் தொகை அதிகாரித்துள்ளன இதற்கான காரணமாக மதுபோதையில் வகனம் செலுத்தால், வீதி போக்குவரத்து விதிகளை பின்பற்றமை, போன்ற காரணங்களாலேயே குறித்த விபத்துக்கள் இடம் பெறுகின்றன, விபத்துக்களால் ஏற்படும் மரணங்கள் அநியாயமாகவே நிகழ்கின்றன.
களுவாஞ்சிகுடி நகரை பாதுகாக்க வேண்டியது எமது கடமையாகும். முச்சக்கரவண்டிச் சங்கத்தினர் இவற்றிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். வழிப்பறிகள், கடைஉடைப்பு, போன்ற பல குற்றச் செயல்கள் பிரதேசத்தில் நடைபெறாமல் இருப்பதற்கு உங்களினதும், சிவில் பாதுகாப்புக் குழுக்களினதும் ஒத்துழைப்பு எமக்குத்தேவை. முச்சக்கரவண்டி சங்கங்கள் பிரச்சினையின்றி ஒற்றுமையாக செயற்பட வேண்டும். பாடசாலை தொடங்கும் முன்னும் முடிந்த பின்னரும் மாணவர்களை கருத்தில் கொண்டு முச்சக்கர வண்டியை செலுத்துங்கள் இதன் ஊடாக எமது மக்களின் பாதுகாப்பினை நாங்கள் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment