6 Nov 2016

போரதீவுப்பற்று பிரதேச கால்நடை வளர்ப்பாளர்கள் இதுவரை காலமும் எதிர் கொண்டு வந்த மேச்சல்தரைப் பிரச்சனைக்கு சுமுகமான தீர்வு.

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் - போரதீவுப்பற்று பிரதேச கால்நடை வளர்ப்பாளர்கள் தாம் இதுவரை காலமும் தமது கால்நடைகள் மேய்த்து வந்த திவுலானைப் பகுதியில் கால்நடைகளை
மேய்ப்பதற்கு அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த வன பரிபாலன சபை தடை விதித்துள்ளதாக போரதீவுப் பற்றுப் பிரதேச கல்நடை வளர்ப்பாளர்களின் கூட்டுறவுச் சங்கத் தலைவர் தெ.சிவபாதம் தெரிவித்தார்.

இந்நிலையில் கால்நடை வளர்ப்பாளர்களின் இப்பிரச்சனை தொடர்பில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கத்திடமும், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சாள்ஸிடமும் தெரிவித்து அவர்களுடான அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருக்கும், அம்பாறை மாவட்ட வன பரிபாலன சபை அதிகாரிகளுக்கும், அறிவிக்கப் பட்டுள்ளன. ஆனாலும் தொடர்ந்து திவுலானைப் பகுதியில்  தமது கால்நடைகளை மேய்ப்பதற்கு அம்பாறை மாவட்ட வன பரிபாலன அதிகாரிகள் தடைவிதித்து வருகின்றனர். என தெ.சிவபாதம் தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞானமுத்து கிருஸ்ணபிள்ளையிடம் தமது பிரச்சனைகள் தொர்பில் வெள்ளிக் கிழமை (04) கால்நடை வளர்ப்பாளர்கள் முறையிட்டனர்.

மேற்படி கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கால்நடை வளர்ப்பாளர்களின் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் தெ.சிவபாதம், மற்றும் கல்நடை வளர்ப்பாளர்கள் ஒரு தொகுதியினர் அடங்கி குழுவொன்று அம்பாறை மாவட்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மஞ்சுள பெர்ணாண்டோ ஊடாக வெள்ளிக்கிழமை (04) மாலை அம்பாறை மாவட்ட வன பரிபாலன அதிகாரியைச் சந்தித்து சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர். 

எதிர்வரும் புதன் கிழமை (09) அம்பாறை கச்சேரியில் வன பரிபாலன அதிகாரிகள், கால்நடை வளர்ப்பாளர்கள், மற்றும் கிழக்கு மாகணசபை உறுப்பினர்கள், பொலிசார், ஆகியோரை உள்ளடக்கியதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வதெனவும், அதன்போது கால்நடை வளர்ப்பாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், வனபரிபாலன சபைக்கு இடைஞ்சல் ஏற்படாமலிருக்கவும் சுமுகமான தீர்வை பெற்றுக் கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அம்பாறை மாவட்டம் மங்களகம பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரியுடன் கலந்துரையாடிய மேற்படி குழு பொலிசாருக்கும், கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் ஓர் சுமுகமான உறவைப்பேனுவது எனவும், தீர்மானிக்கப்பட்டுள்ளது. 









SHARE

Author: verified_user

0 Comments: