18 Nov 2016

கிழக்கு மாகாணத்தின் முதலாவது நவீன சத்திர சிகிச்சை கூடத்தில் சிகிச்சைகள் ஆரம்பம்.

SHARE
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை புற்றுநோயியல் பிரிவுக்கு 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட நவீன சத்திர சிகிச்சை கூடத்தில் வியாழக்கிழமை (நொவெம்பெர் 17, 2016) சத்திர சிகிச்சைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதாக போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் எம்.எஸ். இப்றாலெப்பை தெரிவித்தார்.இது கிழக்கு மாகாணத்தின் முதலாவது நவீன சத்திரசிகிச்சைக் கூடமாகும்.
சுகாதார அமைச்சின் நிதியுதவியுடன் இந்த நவீன சத்திரசிகிச்சைக் கூடம் அமைக்கப்பட்டது.

இலங்கையில் கொழும்பு கண்டி மற்றும் பொலொன்னறுவை ஆகிய இடங்களிலுள்ள அரசாங்க வைத்தியசாலைகளிலேயே இத்தகைய நவீன வசதி கொண்ட சத்திர சிகிச்சைக் கூடங்கள் இயங்கி வருகின்றன.

சத்திர சிகிச்சையின் போது நோய்த் தொற்று ஏற்படமுடியாதவாறும் நோயாளிகளுக்கும் வைத்தியர்களுக்கும்  மிகுந்த சௌகரியத்தை அளிக்கக் கூடிய வகையில் இந்த சத்திர சிகிச்சைக் கூடம் அமைக்கபப்ட்டுள்ளது சிறப்பம்சமாகும் எனவும் பணிப்பாளர் தெரிவித்தார்.





SHARE

Author: verified_user

0 Comments: