தமிழர்கள் போராட்ட காலத்திலும், போராட்டத்திற்கு முற்பட்ட காலத்திலும் கல்வியிலே சிறந்து விளங்கியவர்கள். ஆனால் தற்காலத்தில் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆகிய நிலைபோல் எமது மக்களின் கல்வி அறிவு குன்றிச் செல்கின்றது.
என முன்னாள் நாடாளுமன்ற உப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை (வெள்ளிமலை) தெரிவித்துள்ளார்.
பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்.திருப்பழுகாமம் விபுலானந்தா வித்தியாலயத்தில் அருகிலுள்ள பாடசாலை நல்ல பாடசாலை எனும் திட்டத்தின் கீழ் 8 மில்லியன் ரூபாய் செலவில் அமையவுள்ள கற்றல் வள நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு புதன் கிழமை (02) வித்தியாலய பதில் அதிபர்.திருமதி.க.பொன்னம்பலம், தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்நிகழ்வில் அவர் மேலும் குறிப்பிடுகையில்….
பட்டிருப்பு கல்வி வலயத்தின் கீழுள்ள மட்.விபுலானந்தா வித்தியாலயத்தில் அண்மைக்காலமாக அதிபர் இல்லாமல் பாடசாலை நிருவாகம் பதில் அதிபரின் கீழ் முன்நெடுக்கப்பட்டு வருகின்றன. புதிய அதிபர் ஒருவரை நியமிக்காமல் இப்பாடசாலையிலிருந்த அதிபரை இடமாற்றத்திற்கு அனுமதித்தது மிக மிக வேதனையான விடையமாகும். எனவே இப்பாடசாலைக்கு மிகவிரைவாக புதிய அதிபர் ஒருவரை நியமனம் செய்ய பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரும், போரதீவுப்பற்று கோட்டக் கல்வி அதிகாரியும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போதைய நிலையில் 300 இற்கு மேற்பட்டடோர் அதிபர் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்கள், இன்னும் பலர் 8 வருடங்களுக்கு மேலாக பதில் அதிபர்களாக கடமை புரிந்து வருகின்றார்கள். இவைகளனைத்தையும் மீழ்பரிசீலனை செய்து இப்பாடசாலைக்கு விரைவாக ஓர் அதிபரை நியமிக்க வேண்டும்.
தமிழர்கள் போராட்ட காலத்திலும், போராட்டத்திற்கு முற்பட்ட காலத்திலும் கல்வியிலே சிறந்து விளங்கியவர்கள். ஆனால் தற்காலத்தில் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆகிய நிலைபோல் எமது மக்களின் கல்வி அறிவு குன்றிச் செல்கின்றது.
எனவே இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தமிழினம் கொடிகட்டிப் பறப்பதற்கு கல்வியைச் சிறந்த முறையில் வளர்த்தெடுக்க வேண்டும். இதற்காக வேண்டி நாம் அனைவரும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன், கல்வி, கலாசாரம், பண்பாடு, போன்றவற்றைப் பேணிப்பாதுகாக்க அரசியல்வததிகள், அதிகாரிகள், பெற்றோர்கள், மற்றும் பொறுப்பு வாய்ந்தவர்கள் உட்பட அனைவரும், நடவடிக்கை எடுக்க வேண்டும். என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment