10 Nov 2016

காத்தான்குடி பலசரக்குக் கடையில் திருட்டு

SHARE
மட்டக்களப்பு-காத்தான்குடிப் பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி நகரில்  பலசரக்குக் கடையொன்று உடைக்கப்பட்டு பணமும் பொருட்களும் திருட்டுப் போயுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட பதிவு செய்யப்பட்டுள்ளது.
காத்தான்குடி – 1, ரெலிகொம் வீதியிலுள்ள பலசரக்குக் கடை உரிமையாளரான எம்.ஏ.ஜி. முஹம்மது பிர்தௌஸ் (வயது 30) என்பவர் இது பற்றி பொலிஸில் முறையிட்டுள்ளார்.

வழமை போன்று புதன்கிழமை இரவு 10 மணிக்கு கடையை மூடி விட்டு மறுநாள் வியாழக்கிழமை காலை 7.30 மணியளவில் கடையைத் திறந்து பார்த்தபொழுது கடையின் கூரையைப் பிரித்து உள்நுழைந்து கடையிலிருந்து 1 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணம் உட்பட வேறுபல பொருட்களும் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் பற்றி பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: