மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசத்தில் 09.10.2016 இல் இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு விழாவில் அதிதியாக கலந்தகொண்ட கிழக்கு மாகாண சபை உறப்பினர் கோவிந்தன் கருணாகரம்
(ஜனா) அவர்கள் உரையாற்றும் போது 'வடக்கும் கிழக்கும் தனித்தனியே இருந்தால் கிழக்கில் தமிழர்கள் இரண்டாம் தர பிரஜைகளாக மாறவேண்டிய அபாயம் உள்ளது' என தெரிவித்தார்
அவர் மேலும் உரையாற்றுகையில்,
எமது வாழ்வு மற்றும் பிரதேச அபிவிருத்தியில் முன்னேற வேண்டுமானால் எமது பிரதேசம், சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டுமாக இருந்தால் பொருளாதாரத்தில் மாத்திரமல்லாமல் கல்வி கலாசாரத்திலும் நாம் முன்னேறித்தான் ஆக வேண்டும்.
ஒரு காலத்தில் இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் உள்ள திணைக்களங்களில் தமிழர்கள் தான் கோல}ச்சிய காலம் இருந்தது, ஆனால் இடைநடுவிலே தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டிருந்தார்கள். அதனால் போராட்டம் வெடித்தது. அந்த போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறி இன்று மௌனிக்கப்பட்டிருந்தாலும் எமக்கு ஒதுக்கப்பட்டவை இன்னும் கிடைக்கவில்லை.
அந்த உரிமைகளை பெற தமிழ் தேசிய கூட்டமைப்பு இராஜதந்திரத்தையும், அரசியலையும் பயன்படுத்தி மேற்குல நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உதவியுடனும் இலங்கை அரசாங்கத்திற்கு பெரிய அழுத்தத்தை கொடுத்து பாராளுமன்றத்திலே புதிய அரசியல் யாப்பை உருவாக்கும் செயற்பாடு நடைபெற்று கொண்டிருக்கின்றது. அதன் மூலம் எமக்கான உரிமைகள் கிடைக்கப்பெற்று வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு எங்களை நாங்களே ஆள வேண்டிய சுயட்சி உருவாக்கப்பட வேண்டும்.
இந்த வடக்கும் கிழக்கும் தனித்தனியே இருக்கின்ற பட்சத்தில் கிழக்கு மாகாணத்திலே 39.7 வீதமாக இருக்கின்ற தமிழ் இனம் இன்னும் ஐந்து வருடங்களில் இரண்டாம் தர பிரஜைகளாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்திலே தமிழர்கள் 39.7 வீதமும், முஸ்லிம்கள் 37.8 வீதமும் சிங்களவர்கள் 22 வீதமும் காணப்படுகின்றனர். இநத விகிதம் இன்னும் ஐந்து வருடங்களில் எந்த வகையில் மாற்றப்படும் என்பதை நாம் அறிய வேண்டும். இந்த நிலை ஏற்படாமல் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டுமாக இருந்தால் வட கிழக்கு இணைக்கப்பட வேண்டும். அந்த செயற்பாட்டினை தமிழ் தேசிய கூட்டமைப்பு புதிய அரசியலமைப்பு யாப்பினூடாக நகர்த்தி கொண்டிருக்கின்றது. இதற்காக நாம் அனைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்தி ஒத்துழைப்ப கொடுக்க வேண்டும்.
நான் தற்செயலாக அரசியலுக்குள் வந்தவன். தமிழ் மக்களின் உரிமைகளுக்காக புத்தகப் பைகளை தூக்கி எறிந்து விட்டு ஆயுதமேந்திப் போராடியவர்கள். 1987ம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் அரசியலுக்குள் நுழைந்தேன். குறிப்பாக நான் மக்களை அரசியலுக்காக பகடைக்காய்களாக பயன்படுத்துபவன் அல்ல. அதற்கு இந்த நிகழவும் ஓர் சிறந்த உதாரணமாகும். என்னை எந்தவிதமான முன்னறிவித்தலுமின்றி தொலைபேசியூடாக இந்த நிகழ்வுக்கு அதிதியாக கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற அன்பான கட்டளையினை ஏற்று, கல்வியால் பின்தள்ளப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட இந்த பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவனை நேரடியாக சென்று வாழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தோடு மாத்திரமே இங்கு வந்தேன். எதிர்கால அரசியலுக்காக வந்தவன் அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
எனது ஊதியத்தை நான் மக்களுக்காக செலவு செய்கின்றேன். அதை இரண்டு மூன்று மடங்கு அதிகமாக எமது மக்களுக்காக செலவு செய்கின்றேன். எனது ஊதியத்தில் நான் ஒருசதம் கூட எனது வீட்டிற்கு கொண்டு செல்லவில்லை. இது எல்லாம் எதிர்கால அரசியலுக்காக இடும் மூலதனமல்ல என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், போராட்டத'திற்காக என் உயிரை துச்சம் என எண்ணி போராட்டத்திற்கு சென்றவன். 1986ம் ஆண்டு விஷேட அதிரடிப்படையினரின் யுத்தத்தின் போது நான் காயப்பட்டு மீண்டும் உயிர்மீண்டவன். அதன் போது நான் இறந்திருந்தால் இன்று என்னை இந்த உலகம் மறந்திருக்கும். பின்னர் பாராளுமன்ற உறுப்பினராக மக்களுக்க சேவை செய்து திருமணமாகிய பின்பு இந்த நாட்டில் இருக்க முடியாமல் வெளிநாட்டிற்;கு சென்று பின்னர் மக்களுக்காக சேவை செய்ய மீண்டும் நாட்டிற்கு வந்தவன். அரசியலில் இருந்தால் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். அவ்வாறு சேவை செய்ய தூய்மையான மனம் வேண்டும். அதை விடுத்து வாழும் காலத்தினுள் ஒருவருடன் பகை கொள்ளாமல் அடுத்தவரையும் சமமாக மதித்து நடந்து கொள்ள வேண்டும். தேர்தல் காலங்;களில் அரசியல் வாதிகளுக்கு உதவி செய்யும் நபர்களுக்கு மட்டும் வெற்றியின் பின்னர் அவர்கள் உதவி செய்யாமல் அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும். ஏனென்றால் வெற்றி பெற்றவர் அந்த மாவட்டத்தின் பிரதிநிதியாவர் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். நான் மக்களுக்கு சேவை செய்ய என்றும் தயாராக உள்ளேன். எனவும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment