4 Oct 2016

இந்தநாட்டில் இடம்பெற்ற துன்பகரமான பக்கங்கள் இனிமேல் புரட்டப்படக் கூடாது-கிழக்குமாகாண விவசாய அமைச்சர் துரைராசசிங்கம்

SHARE
கடந்தகாலத்தில் இடம்பெற்ற துன்பகரமான பக்கங்கள் இனிமேல் இந்தநாட்டில் புரட்டப்படக் கூடாது. தமிழர்களும்,சிங்களவர்களும், முஸ்லீம்களும் என்றுதான் நாங்கள் அதிகம் பேர் இங்கு இருக்கின்றோம். இலங்கையர்கள் என்போர் எம்மில் சிலர்தான் இருக்கின்றார்கள். அந்தநிலைமாறிநாம் அனைவரும் இலங்கையர்கள் என்றுசொல்லுகின்றநிலைவரவேண்டும்
என கிழக்குமாகாணவிவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

திங்கட் கிழமை (03) அம்பாறையில் இடம்பெற்ற கூட்டுறவுஅபிவிருத்தித் திணைக்களத்தின் நிகழ்வு ஒன்றில் பிரதமஅதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதேஅவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போதுஅவர் மேலும் தெரிவிக்கையில்,
இரண்டே இரண்டுதேசியமொழிகளைக் கொண்டிருக்கின்ற இந்தநாட்டில் பலதமிழ் மக்களால் சிங்களம் பேசமுடியவில்லைபலசிங்களமக்களால் தமிழ் பேசமுடியவில்லைஎன்பது இந்தநாட்டின்மிகவும் துக்ககரமானபக்கங்கள்.அதனைஅவ்வாறேவைத்துதற்போது இருக்கின்ற இந்த இடத்தில் இருந்துஎன்னசெய்யப் போகின்றோம் என்பதுபற்றிநாம் சிந்திக்கவேண்டும்.

கிழக்குமாகாண கூட்டுறவுஅமைச்சினைநான் கையேற்கும் போது இந்ததிணைக்களம் குறைபாடுகளின் குவியலாக இருந்ததமையைஅவதானிக்கமுடிந்தது.அந்த இடத்தில் இருந்துதான் அதனைப் பெறுப்பேற்றேன். அந்தநிலையில் இருந்துதற்போதுசிறப்பானஒருநிலையில்செல்வதற்கானஆரம்பத்தினைஏற்படுத்திஉள்ளோம்எனநான் நம்புகின்றேன்.

தற்போது இருக்கின்ற கூட்டுறவுசார்ந்தசட்டங்கள் பிழைகளை,தவறுகளை,குற்றங்களைப் பிடிப்பதுதொடர்பில் மிகவும் மந்தகதியிலானதாகவே இருக்கின்றது.இதுநாடுமுழுவதும் உள்ளகுறைபாடு. இது தொடர்பரில் மத்தியஅரசாங்கம் தான் நடவடிக்கைகளைமேற்கொள்ளவேண்டும். அப்போதுதான் மாகாணசபையினூடாகநாம்நியதிச் சட்டங்களைஉருவாக்கமுடியும். இருப்பினும் திருடனாய்ப் பார்த்துதிருந்தாவிட்டால் திருட்டைஒழிக்கமுடியாதுஎனதமிழில் ஒருவார்த்தை இருக்கின்றதுஅதுசெய்பாட்டிற்குவரும் போதுதான் பலவற்றைமாற்ற கூடியதாக இருக்கமுடியும்.

இங்குபல்வேறுகுறைபாடுகள் சுட்டிக் காட்டப்பட்டதுஅதுதொடர்பில் கூட்டுறவுஆணையாளருடன் கதைத்திருக்கின்றோம். கூட்டுறவுச் சங்கங்களின் ஆர்வத்தைகுறைத்திடாதவிதத்தில் உங்களுக்குதரக் கூடியஆதரவைஎமதுஅமைச்சுதரும் என்றஉத்தரவாதத்தினைநான் தெரிவிக்கின்றேன்.

இத்தோடுசேர்ந்துநாம் எல்லோரும் சிந்திக்கவேண்டியவிடயங்கள் பல இருக்கின்றன, 2015ம் ஆண்டு இந்தநாட்டில் முக்கியமானஒருமாற்றம் நடைபெற்றது. இதன் காரணமாகத்தான் நான்தமிழில் உரையாற்றும் போதுசிங்களமக்களாகியநீங்கள் பொருமையோடுகேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். உங்கள் நிகழ்வுகளில் நாங்கள் கலந்துகொள்கின்றோம்.

இவ்வாறுபற்பலவிடயங்கள் இங்குநடைபெற்றன. அதாவதுநாங்கள் மொழிகடந்தவர்களாக,எமதுமொழிகளைமகிழ்வுடன் பரிமாறிக் கொள்கின்றவர்களாக இருக்கின்ற இந்தமாற்றம் அந்த 2015ம் ஆண்டுஏற்பட்டமாற்றத்தின் வெளிப்பாடுகளே.

இந்தநிலைமைய இந்தநாட்டில் தொடர்ந்து இருக்கவேண்டும் என்றுவிரும்பாதவர்கள் இருக்கமுடியாது, இருக்கக் கூடாதுஎன்றேநான் நினைக்கின்றேன்.
நாங்கள் பேசித் தீர்க்கவேண்டியவிடயங்களையெல்லாம் பெரிதுபடுத்தி,நாம் எல்லாம் ஒருஅன்பானதாய் பெற்றஅழகானகுழந்தைகள் என்பதைமறந்துஒருவரைஒருவர் கொன்று,ஒருவருடைய இரத்தம் சிந்தப்படுகின்றபோதுமற்றையவர் சந்தோசப்பட்டிருக்கின்றோம், இந்தநாட்டின் சொத்துஅழிகின்றதுஎன்பதுஅறியாமல் ஒருவரின் சொத்துஅழியும் போதுமற்றையவர் சந்தோசப்பட்டிருக்கின்றோம். ஒருபிரதேசத்தின் வீடுகள் கொழுத்தப்பட்டபோதுமற்றையவர்கள் சந்தேசப்பட்டிருக்கின்றோம். ஒருபக்கத்துசொத்துக்கள் கொள்ளையடிக்கப்படுகின்றபோதுமற்றையவர் சந்தோசப்பட்டிருக்கின்றோம். இவ்வாறானதுன்பியல் செயற்பாடுகளைமேற்கொண்டிருக்கின்றோம்.

இவ்வாறானதுன்பகரமானபக்கங்கள் இனிமேல் இந்தநாட்டில் புரட்டப்படக் கூடாது. தமிழர்களும்,சிங்களவர்களும், முஸ்லீம்களும் என்றுதான் நாங்கள் அதிகம் பேர் இங்குஇருக்கின்றோம். இலங்கையர்கள் என்போர் எம்மில் சிலர்தான் இருக்கின்றார்கள்.அந்தநிலைமாறிநாம் அனைவரும் இலங்கையர்கள் என்றுசொல்லுகின்றநிலைவரவேண்டும். 

நாங்கள் எங்களுடையதனித்துவங்களைமாற்றாதுஒற்றுமையாக இருக்கவேண்டும்,ஒருகுடும்பமாக இருக்கவேண்டும் என்கின்றஉண்மையை இனிவரும் காலங்களில் மறந்திடாமல் இருந்திடவேண்டும்.
பௌத்தமதம் என்பது இந்துமதத்திலிருந்துசென்றஒருபுரட்சிகரமானமதம். புத்தபகவான் இந்துமதத்தில் ஒருபுரட்சியாகவேபௌத்தமதத்தினைதோற்றுவித்தார். எனவேதமிழர்கள் சிங்களவர்கள் மதம் என்கின்றரீதியில் வேறுபாடாக இருந்தாலும் கூட கலாச்சாரத்தில் ஒன்றாகத்தான் இருக்கின்றோம்.

அதுபோலவே முஸ்லீம்மக்களைப் பொருத்தவகையில் எமதுமதங்கள் தான் வேறுபாடுஆனால் மொழிஎன்கின்றரீதியில் நாங்கள் ஒருமித்தே இருக்கின்றோம். எனவேநாங்கள் வேற்றுமையிலேஒற்றுமைகண்டு இந்தநாட்டினுடைய இயற்கைநிலைமையைஅறிந்துஅதற்கேற்றவிதத்தில் தற்போதுஆக்கப்பட இருக்கின்றஅரசியலமைப்புச் சட்டம் சிறந்தமுறையில் ஆக்கப்படுவதற்குஅனைவரும் ஒத்துழைத்துஎமதுநாடு இந்துசமுத்திரத்தின் கண்ணீர்த் துளியாகஅல்லாமல் இந்துசமுத்திரத்தின் முத்தாகஇருந்திடஅனைவரும் செயற்படவேண்டும்,அதற்காகநாம் சிந்தித்திடவேண்டும் என்றுதெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: