4 Oct 2016

வரட்சிக்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையில் கிராமங்கள் தோறும் சிறிய குளங்கள் அமையப் பெறவேண்டும்.

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் தற்போது கடும் உஷ்னமான காலநிலை நிலவிக் கொண்டிருக்கின்றது. இப்பகுதியில் வருடா வருடம் சித்திரை மாதம் தொடக்கம் ஐப்பசி மாதம் வரையில் வரட்சியான
காலப்பகுதியாகும். இக்காலப்பகுதியில் இங்குள்ள மக்கள் மத்தியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதோடு, கால் நடைகளும் குடிநீருக்காக அலைந்தது திரிகின்றன.

என போரதீவுப்பற்று பிரதேச கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் தெ.சிவபாதம் தெரிவித்தார்.

தற்போது எதிர் கொண்டுள்ள வரட்சி நிலமை தொடர்பில் செவ்வாய்க் கிழமை (04) கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் இவ்விடையம் தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்…..

ஆனாலும் இப்பிரதேசத்தில் என்று மில்லாத வகையில் இம்முறை வரட்சி மக்களைப் பாதித்திருக்கின்றது. குடிநீரின்றி இப்பகுதியிலுள்ள மக்கள் மிகுந்த சிரமங்களை எதிர் கொண்டு வருகின்றார்கள் போரதீவுப் பற்றுப் பிரதேச சபை குடிநீரிரை வவுசர்கள் மூலம் வழங்கி வருகின்ற போதிலும் அனைத்து மக்களின் தேவைகளையும், பூர்தி செய்ய முடியாத நிலையும் பிரதேச சபைக்கும் இருக்கின்றது. இதனால் பாடசாலை மாணவர்களும் பெரும் இன்னல்களை எதிர் கொண்டு வருகின்றார்கள்.

தற்போது மேச்சல்தரைப் பகுதிகளை நோக்கி பண்ணையாளர்கள் கால்நடைகளைக் கொண்டு செல்கின்றார்கள். வரட்சியினால் தற்போது பச்சைப் புல்லினங்கைளைக் காணமுடியாமலுள்ள இப்பகுதியில் எமக்கு கிடைக்கின்ற பாலின் அளவும் வெகுவாகக் குறைந்துள்ளது. எனவே வரட்சிக்கு ஈடு கொடுக்கக் கூடிய ஒரு தீர்வை அரசு முன் வைக்க வேண்டும்.

இப்பகுதியிலுள்ள பெரும்பாலான கிராமங்களில் சிறிய, சிறிய குளங்கள் அமைந்துள்ளன அவ்வாறான குளங்களை அகழ்ந்து மாரி காலங்களில் கிடைக்கின்ற மழை நீரைத் தேக்கி வைத்தால் கால் நாடைகளுக்கு மாதிரமின்றி பொது மக்களுக்கும் பெரும் வாய்ப்பாக அமையும்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் 2000 குளங்கள் புணரமைப்பு நடவடிக்கைகள் முன்நெடுக்கப்பட்டன ஆனால் இப்பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு குளத்தின் புணரமைப்பு வேலைகள் மாத்திரமே நடைபெற்றதை நாம் அறிவோம். எனவே தற்போதுள்ள நல்லாட்சி அரசாங்கமாவது கிராமங்கள் தோறும் சிறு குளங்களை அகழ்ந்து அந்த அந்தக் கிராமங்களின் தேவைகளைப் பூர்தி செய்யுமளவிற்கு மழை நீரைத் தேக்கி வைத்தால் வருடாந்தம் எதிர் கொள்ளும் வரட்சி நிலமைக்கு ஓரளவு தாக்குப் பிடிக்கக் கூடியதாக இருக்கும்.

போரதீவுப் பற்று பிரதேசத்திலுள்ள 43 கிராம சேவகர் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக 35000 இத்திற்கு மேற்பட்ட கால் நடைகள் காணப்படுகின்றன. ஒரு நாளைக்கு இப்பெருந்தொகையான கால்நடைகள் அருந்த வேண்டிய நீரின் அளவு அதிகமாகவுள்ளது. எனவே இதனை இவ்வாறான வரட்சி காலத்தில் சாதாரணமாககத் தீர்க்கக் கூடியவிடையமல்ல. எனவே அந்தந்த கிராமங்களில் சிறிய, குளங்களை அமைப்பதே சிறந்த வழிமுறையாகும். என அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: