யுத்தம் மற்றும் சுனாமித் தாக்கம் காரணமாக உளநலப் பாதிப்புக்கு உள்ளாகிய நிலையில் அநாதரவாக தெருக்களில் நடமாடுவோர் சிகிச்சை பெறவும் ஆயுள் முழுவதும் தங்கியிருந்து தமது வாழ்நாளைக் கழிக்கவும் நிலையம் தேவை என கனேடிய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக சிரேஷ்ட உளநல மருத்துவர் பி. ஜுடி ரமேஷ் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு உளநல புனர்வாழ்வு நிலையத்தின் ஒரு பிரிவாக இயங்கி வரும் மட்டக்களப்பு மாவடிவேம்பு உளநல புனர்வாழ்வு நிலையத்திற்கு புதன்கிழமை மாலை வருகை தந்திருந்த இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி வைற்றிங் (ளாநடடல றாவைiபெ) இடம் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.
இதுபற்றி அவர் கனேடிய உயர் ஸ்தானீகரிடம் மேலும் கூறும்போது@
“நாட்பட்ட உளநோய், மதுபோதை, மற்றும் பலவேறுவகைப் பாதிப்புக்குள்ளான பெண்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்குமான புனர்வாழ்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றோம்.
அதேபோல் பாடசாலையிலிருந்து இடைவிலகிய பெண்களுக்கான வாழ்வாதார மற்றும் வாழ்க்கைத் திறன் சார்ந்த தொழிற் பயிற்சிகளையும் இந்த நிலையத்தில் வழங்கி வருகின்றோம்.
அவர்களை மீண்டும் தங்களது குடும்பங்களோடு சேர்ந்து வாழ்வதற்கான பயனுடைய செயற்திட்டங்களாக இவை வெற்றியளித்துள்ளன.
பிரச்சினைகளோடு இந்த நிலையத்திற்கு வந்தவர்களிடமிருந்து கற்றுக் கொண்ட பாடங்களுக்கூடாகவேதான் நாங்கள் இங்கு பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம்.
ஏற்கெனவே 100 பேரளவில் இந்த தொழில்வழிப் புனர்வாழ்வினூடாகப் பயனடைந்திருக்கின்றார்கள்.
எனினும், ஆகக் குறைந்தளவிலான வசதிகளை வைத்துக் கொண்டே நாம் இந்தப் பணிகளைச் செய்து வருகின்றோம்.
அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்த புனர்வாழ்வு நிலையத்தில் தொழிற்பயிற்சி பிரிவு ஒன்றை அமைப்பதற்குரிய ஆரம்பக் கட்டுமானத்துக்கான நிதியுதவியைத் தந்திருக்கின்றது.
அதேவேளை, அதனை விரிவுபடுத்துவதற்கான கட்டிட வசதிகளைச் செய்வதற்கு நிதியளிக்குமாறு கனேடிய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
யுத்தம் மற்றும் சுனாமித் தாக்கம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு குடும்பங்களால் கைவிடப்பட்ட அல்லது அநாதரவாகித் தெருவுக்கு வந்த சுமார் 10 பேர் வரையில் இந்த புனர்வாழ்வு நிலையத்தில் தங்கியிருக்கின்றார்கள்.
அவர்களுக்கு நீண்ட கால புனர்வாழ்வு தேவைப்படுகின்றது. ஆயினும், அத்தகையவர்களை பராமரிப்பதற்கென்று இல்லம் தேவைப்படுகின்றது. அதற்காக இரண்டு இல்லங்களை அமைத்துத் தருமாறு கனேடிய உயர்ஸ்தானிகரிடம் வேண்டுகோள் முன்வைக்கின்றோம்.
இதனை விட முக்கியமாக வீட்டு வன்முறைகள், தற்கொலை சார்ந்த பிரச்சினைகள், சிறுவர் துஷ்பிரயோகங்கள் ஏனைய உள சமூகப் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கும் எவ்வாறு உதவ முடியும் என்பதைப் பற்றியும் பரிசீலிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
இப்பொழுதும் பாடசாலையை விட்டு இடைவிலகிய இளம் பெண்களுக்கான தொழிற் பயிற்சி இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
உளநலன் தேவைப்பட்டோரும் இந்த தொழில்வழிப் புனர்வாழ்வுப் பயிற்சியில் ஈடுபடுகின்றார்கள்.” என்றார்.
கனடிய உயர் ஸ்தானிகருடன் கனடிய அரசியல் பொருளாதார ஆலோசகர் ஜெனிபெர் ஹார்ற் (துநnnகைநச ர்யசவ- Pழடவைiஉயட யனெ நுஉழழெஅiஉ ஊழரளெநடடழச) உம் உடனிருந்தார்.
0 Comments:
Post a Comment