(இ.சுதா)
ஆசிரியர் தொழில் என்பது ஏனைய தொழில்களை விடவும் மேலான புனிதமான அர்ப்பணிப்பான சமூகக் கட்டமைப்பினை நெறிப்படுத்துகின்ற தொழிலாகும். சேவை மனப்பாங்கு கொண்ட தன்னிறைவான ஆசிரியர்கள் வாழ் நாள் முழுவதும்
போற்றப்படக் கூடியவர்கள். ஆசிரியர் தொழில் என்பது பணி அல்ல சேவை இ மாணவர்களின் அறியாமையினைப் போக்கி ஞான ஒளியினை வழங்குகின்ற ஆசிரியர் பெருந்தகையினர் சர்வ தேச ரீதியாக கௌரவிக்கப்படுகின்றமை மகிழ்ச்சி தரும் விடயமாகும்.
இவ்வாறு பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள உதயபுரம் தமிழ் வித்தியாயத்தின் அதிபர்; எஸ்.பேரின்பராசா தலைமையில் வியாழக் கிழமை (06) நடைபெற்ற ஆசிரியர் தின நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு வாழ்துரைக்கும் போது மண்முனை தென் எருவில் பற்று கோட்டக் கல்விப் பணிப்பாளர் வி.திரவியராஜா இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ஆசிரியர்கள் ஏனைய அனைத்துத் தொழில்களுக்கும் வழிகாட்டி மாத்திரமல்லாது பல சமூகக் கட்டமைப்புகளிலிருந்தும் பாடசாலைகளுக்கு வருகின்ற மாணவர்களை ஒழுங்கமைத்து அவர்களை நெறிப்படுத்தி சமூகம் எதிர் பார்க்கும் அளவிற்கு வெளியீட்டினை ஆசிரியர்களினால் மாத்திரமே வழங்க முடியும்.
மாணவச் செல்வங்களை ஒழுக்க சீலர்களாக மாற்றுகின்ற அனைத்துப் பொறுப்புக்களும் ஆசிரியர்களைச் சார்ந்தது.கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பது போல ஆசிரியர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்புண்டு இந்த இலக்கினை ஆசிரியர்களைத் தவிர வேறு யாரும் பெற முடியாது.
தமது சேவையினை தன்னிறைவாக செய்யக் கூடிய ஆசிரியர்கள் கௌரவிக்கப் படவேண்டியதுடன் அவர்களின் சேவை வாழ்நாள் முழுவதும் தொடர கோட்டக் கல்விப் பணிப்பாளர் என்ற வகையில் வாழ்த்துவதாக குறிப்பிட்டார்.
0 Comments:
Post a Comment