5 Oct 2016

வடகிழக்கு இணைந்த மாகாண சுயாட்சிக்கு காணி பொலீஸ் அதிகாரங்களுடன் கூடிய தீர்வு வேண்டும்- ஜனா

SHARE
(பழுவூரான்)

வடகிழக்கு இணைந்த ஒரு சமஸ்டி தீர்வுடன் காணி, பொலிஸ் அதிகாரங்கள் முழுமையாக மாகாணசபைகளுக்கு வழங்கப்படவேண்டும். இவ் அதிகாரங்கள் வருமேயானால் எமது எல்லைக் கிராமங்கள் பாதுகாக்கப்படும். இதன் முதற்படியாக பாராளுமன்றம் ஒரு அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்பட்டு அரசியல் யாப்பை உருவாக்கும்  நடவடிக்கைகள் தற்போது நடந்து வருகின்றது.என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.
கல்குடா, மிராவோடை பாடசாலை நிகழ்வெற்றில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மிராவோடைக்கும் எனக்கும் நீண்டகாலத் தொடர்பு உள்ளது. கடந்த 84ஆம் ஆண்டில் இருந்து இந்த  மண்ணில் எனது பாதம் பட்டுக்கொண்டிருக்கின்றது. இந்த ஊரில் இருந்து என்னுடன் விடுதலை போராட்டத்தில் தங்களை அர்பணித்த எத்தனையோ நண்பர்கள் உயிருடனும் இருக்கின்றார்கள் எமது மக்களின் விடுதலைப் போராட்டத்தில் மரணித்தும் இருக்கின்றார்கள்.

மீராவோடை கிராமம் ஒரு முக்கியமான ஊடுருவலுடன் எமது பிரதேசத்தை ஆக்கிரமிப்பதற்க அரசியல் வாதிகளின் உறுதுணையுடன் சில விஷக்கிருமிகள் இங்கு நகர்ந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த ரீதியிலே கிராமத்தின் கல்வியை முன்னேற்றக்கூடிய இந்த பிரதேசங்கள் கூட அபகரிப்புக்கு உள்ளாகும் நிலைமையில் இருக்கின்றது. இந்த நேரத்தில் நாங்கள் ஒற்றமையாக இருந்த பாதுகாக்க வேண்டும். 1987ம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தம் ஏற்படத்தப்பட்டு மாகாணசபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபைகளுக்க வரையறுக்கப்பட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தது. காணி அதிகாரம் வழங்கப்பட்டிருந்தாலும் மத்திய அரசினால் மீண்டும் கையேற்கப்பட்டிருந்தது. பொலிஸ் அதிகாரம் கொடுக்கப்பட வேண்டி இருந்தும், இன்னும் கொடுக்கப்படவில்லை. இன்னும் பல கிராமிய உட்கட்டமைப்புக்களை அபிவிருத்தி செய்யக்கூடிய அதிகாரங்கள் இருந்தும் திவிநெகும சட்டத்தின் மூலம் அவ்வதிகாரங்களில் சில பறிக்கப்பட்டிருந்தன. 1987இல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் தற்காலிமாக இணைக்கப்பட்டிருந்த வட-கிழக்கு மாகாணங்கள் 2006ம் ஆண்டு நீதிமன்றம் மூலம் பிரிக்கப்பட்டது. 

நான் எதற்காக இதனை எல்லாம் கூறுகின்றென் என்றால்; 2015இற்கு முன்பு பத்து ஆண்டுகளாக இந்த நாட்டில் கொடூர ஆட்சி நடைபெற்று தற்போது நல்லாட்சி நிலவுகின்றது. கடந்த பாராளுமன்ற தேர்தலின் பின்னர் பாராளுமன்றம் ஒரு அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்பட்டு இந்நாட்டுக்கு பதிய அரசியல் யாப்பை உருவாக்கும் செயற்பாடு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதன் மூலம் ஜனாதிபதி முறையை ஒழிப்பது மட்டுமல்லாது பாராளுமன்ற தேர்தல் முறையில் பழைய முறையைக் கொண்டு வருவதுடன் புரையோடி போயிருக்கின்ற எமது இனப்பிரச்சினைக்கு தீர்வை காண்பதும் அதில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. 

வடகிழக்கு இணைந்த ஒரு சுயாட்சியுடன் கூடிய சமஸ்டி தீர்வை கொண்டுவரவேண்டும். இதன் மூலம் காணி, பொலிஸ் அதிகாரங்கள் முழுமையாக மாகாணசபைகளுக்கு வழங்கப்படவேண்டும். இவ் அதிகாரங்கள் வருமேயானால் எமது எல்லைக் கிராமங்கள் பாதுகாக்கப்படுவதுடன் எமது மக்களின் காணிகளும் பாதுகாக்கப்படும்.

இந்த நேரத்திலே தெற்கிலும் வடகிழக்கிலும் கடும் போக்கு அரசியல்வாதிகள் தங்களை நிலைநிறுத்திக் கொண்டு இந்த நாட்டில் ஒரு ஸ்திரத் தன்மையை இல்லாமலாக்குவதற்கான வேலைத் திட்டங்களில் இறங்கியுள்ளனர்.

 தமிழ் மக்கள் நாங்கள் நிதானமாக இருக்க வேண்டிய காலமிது. 2009 மே 18ஆம் திகதிக்கு முன்பு இந்த வடகிழக்கிலே ஆயுதப் போராட்டம் நடந்துகொண்டிருந்த காலத்திலே எங்களது பலம் வடகிழக்கிலே ஆயுத ரீதியாக கையோங்கியிருந்தது. சமாதானப் பேச்சுவார்த்தைக்குச் சென்று ஒரு தீர்வு கிடைக்கவில்லை என்றால் 'அது இல்லாவிட்டால் இது' என்கின்ற நிலைமையில் எங்களது பலம் இருந்தது. ஆனால் இன்று தமிழ் மக்கள் அரசியல் ரீதியில் ஒரு தீர்வைப் பெறவேண்டிய நிலையில் இருக்கின்றோம். நாங்கள் அமைதியாக இருக்க வேண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கரங்களை பலப்படுத்த வேண்டும் அதனூடாக எமது பிரதேசங்களை பாதுகாத்து கல்வி, பொருளாதாரம், கலாசாரம் போன்ற சகல வழிகளிலும் நாங்கள் எமது மக்களை உயர் நிலைக்கு கொண்டுவரலாம். என தெரிவித்தார்.




87ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு மாகாணசபை முறைமை இந்த நாட்டிலே அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபைகளுக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தது. காணி அதிகாரம் வழங்கப்பட்டிருந்தாலும் அந்த காணி அதிகாரம் மத்திய அரசினால் மீண்டும் கையேற்கப்பட்டிருந்தது. பொலிஸ் அதிகாரம் கொடுக்கப்படவிருந்தும் அந்த அதிகாரம் இதுவரைக்கும் கொடுக்கப்படவில்லை. இன்னும் பல கிராமிய உட்கட்டமைப்புக்களை அபிவிருத்தி செய்யக்கூடிய அதிகாரம் இருந்தும் திவிநெகும சட்டத்தன் மூலமாக அந்த அதிகாரங்களில் சில பறிக்கப்பட்டிருந்தது.

87ஆம் ஆண்டிலே  இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படும் போது இணைக்கப்பட்டிருந்த வடகிழக்கு மாகாணங்கள் 2006லே நீதிமன்றங்கள் மூலமாக பிரிக்கப்பட்டது. கடந்த காலங்களிலே எமது நாட்டிலே 2005 ஜனவரி தொடக்கம் 2015 ஜனவரி 8 வரை ஒரு பத்து ஆண்டுகளாக ஒரு கொடிய ஆட்சி நடந்து, தற்போது ஒரு நல்லாட்சி என்று செல்லிக்கொண்டிருக்கும் ஒரு ஆட்சி உருவாகியிருக்கிறது.

தற்போது பாராளுமன்றத்திலே சில முன்னேற்றகரமான செயற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. பாராளுமன்றம் ஒரு அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்பட்டு  ஒரு அரசியல் யாப்பை உருவாக்கும் நடவடிக்கை நடந்துகொண்டு வருகின்றது.  இதன்மூலம் ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது மாத்திரமல்லமல்  பாராளுமன்ற தேர்தல் முறைகளிலும் மாற்றம் கொண்டுவரப்படுவதுடன் இனப் பிரச்சனைக்கான தீர்வைக் காண்பதும் அதில் அடங்குகின்றது. இதில் பல முன்னேற்றகரமான செய்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றது.









SHARE

Author: verified_user

0 Comments: