4 Oct 2016

அதிகார இழுபறி தீர்க்கப்பட்டாலே முழுமையான அபிவிருத்தியை முன்னெடுக்க முடியும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ். தண்டாயுதபாணி

SHARE
மத்திய மற்றும் மாகாண அரசுகளுக்கிடையிலான அதிகார இழுபறி தீர்க்கப்பட்டாலே மாகாண சபைகளால் முழுமையான
பிவிருத்தியை முன்னெடுக்க முடியும் என கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ். தண்டாயுதபாணி தெரிவித்தார்.

கிழக்கு மாகாண பாலர் பாடசாலை தலைமைக் காரியாலயம் மற்றும் மாவட்ட அலுவலகம் ஆகியவற்றுக்கான அலுவலகத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வு திங்களன்று (ஒக்ரோபெர் 03, 2016) மட்டக்களப்பு நகரில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர்@

அரசியலமைப்பின் 13 ஆவது சரத்தில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மத்திய அரசு விட்டுக் கொடுக்காமல் இன்னமும் தன்வசமே வைத்துள்ளதால் ஒருவிதமான கருமங்களையும் மாகாண சபையால் முடித்துக் கொள்ள இயலவில்லை.

இது ஒரு ஏமாற்று போல எண்ணத் தோன்றுகின்றது.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவினால் திவிநெகும சட்டம் அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்டு அந்த சட்டத்திற்கு மாகாண சபைகள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என கூறியிருந்தபோது அப்போது எதிர்க்கட்சியில் வரிசையில் அமர்ந்திருந்த நாமும் அந்த திவிநெகும சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவளித்தோம்.

திவிநெகும திட்டம் கிராமிய பொருளாதாரத்தை உயர்த்தும் என்று கூறியிருந்த போதும் அந்த சட்டம் சந்தை மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி உள்ளிட்ட அதிகாரங்களை மட்டுமல்லாது மாகாண அதிகாரங்களையும் பறித்த சட்டமாகும்.
மாகாண சபைகளுக்கு மத்திய அரசினால் வழங்கப்பட்டுள்ள அரைகுறையான அதிகாரங்களையும் மத்திய அரசு பறித்தெடுத்துள்ளது.” என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: