கிழக்கு மாகாண சபையின் 65ஆவது அமர்வுக்கு வருகை தந்திருந்த, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாண சபை
உறுப்பினருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), மாகாண சபை அமர்வு முடிந்த பின்னர், தான் வெளியில் வரும்வரை தன்னை அழைக்க வேண்டாம் எனக் கூறி, மாகாண சபைக்குள்ளேயே அமர்ந்து கொண்டார்.
இன்று வியாழக்கிழமை (27) பிற்பகல் 3.15 மணியளவில் சபை அமர்வு முடிவடைந்த நிலையில், பிற்பகல் 4 மணிவரை சபையின் அறைக்குள் இருந்து கொண்டு அவசரமாக செல்ல முடியாது என பொலிஸாரிடம் தெரிவித்த அவர், அங்கேயே இருந்துவிட்டார்.
0 Comments:
Post a Comment