யுனிசெப் நிறுவனத்தின் தாய் சேய் சுகாதார போஷாக்குத் திட்டத்தின் கீழ் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் வாழ்வாதாரத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சர்வோதய நிறுவனத்தின் மாகாண இணைப்பாளர் ஈ.எல். அப்துல் கரீம் தெரிவித்தார்.
அதனடிப்படையில் பல்துறைப் போஷாக்கு மட்டத்தின் மந்த போஷாக்கு நிலைமையின் கீழ் அடையாளம் காணப்பட்டுத் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக 3 குடும்பங்களுக்கு திங்களன்று (ஒக்ரோபெர் 10, 2016) தலா 15 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதேவேளை தெரிவு செய்யப்பட்டுள்ள மேலும் 2 குடும்பங்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நல்லினக் கோழிகள் அடுத்த ஒரு சில தினங்களில் வழங்கபப்டவுள்ளதாக கரீம் மேலும் தெரிவித்தார்.
ஆடுகள் வழங்கும் நிகழ்வில் சர்வோதய நிறுவனத்தின் மாகாண இணைப்பாளர் ஈ.எல். அப்துல் கரீம், சுகாதாரத் திணைக்களத்தின் அலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர், சர்வோதய அலுவலர்கள், பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment