மட்டக்களப்பு நகரம் பெரிய உப்போடையில் முதலையின் தாக்குதலுக்குள்ளான மீனவர் வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு லேடி மனிங் ட்ரைவ் வாவியில் சடலமாக மீட்கப்பட்டார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான மட்டக்களப்பு பெரிய உப்போடையைச் சேர்ந்த செல்லையா அழகேந்திரம் (வயது 63) என்பவர் புதன்கிழமை இரவு வழமைபோன்று மட்டக்களப்பு வாவியில் மீன் பிடிக்கச் சென்றிருந்த போது முதலையின் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் காணாமல் போயிருந்தார்.
இவரைத் தேடும் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது அவரது சடலம் கை கால்கள் அற்ற நிலையில் வியாழக்கிழமை காலை மீனவர்களாலும் கடற்படையினராலும் மீட்கப்பட்டது.
சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment