(இ.சுதா)
சர்வதேச ஆசிரியர் தினத்தினை முன்னிட்டு 2016ம் ஆண்டிற்கான சிறந்த அதிபர் இஆசிரியர்களை கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வு கடந்த 05.10.2016 ம் திகதி கொழும்பு கொக்குன் கலையரங்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் பட்டிருப்பு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பெரியகல்லாறு மெதடிஸ்த மிஷன் தமிழ்க் கலவன் பெண்கள் பாடசாலையில் ஆசிரியையாக கடமையாற்றும் திருமதி அனுஷா டி.கொஜ்ரா ஜனாதிபதியினால் குருப்பிரதீபா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
கல்முனை பாண்டிருப்பினைப் பிறப்பிடமாக் கொண்ட இவர் வடமேல் மாகாணத்திலுள்ள புத்தளம் மாவட்டத்தில் சுமார் எட்டு வருடங்கள் ஆசிரியையாக சேவையாற்றி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பாரிய சேவையாற்றியதுடன் தற்போது பெரிய கல்லாறு மெ.மி.த பெண்கள் பாடசாலையினை வலயத்திலுள்ள முன்மாதிரியான பாடசாலையாக மாற்றுவதில் அயராது உழைத்தவர். இவர் சிறந்த சமூக சேவையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment