27 Oct 2016

மஞ்சள் கோட்டில் பொலிஸ் வாகனம் மோட்டார் சைக்கிள் பயணி மீது மோதி விபத்து ஒருவர் படுகாயம்.

SHARE
மட்டக்களப்பு நகரில் வியாழக்கிழமை (ஒக்ரோபெர் 27, 2016) இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த அமிர்தலிங்கம் தினேஸ்கரன் (வயது 18) என்ற இளைஞர் படுகாயமடைந்து
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனை – மட்டக்களப்பு பிரதான நெடுஞ்சாலையில் மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திற்கு அருகில் மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக வைத்திய பீடத்துக்கு முன்பாக இந்த விபத்து இடம்பெற்றது.

அவ்விடத்தில் இருந்த மஞ்சள் கோட்டைக் கடக்க ஒருவர் முற்பட்ட வேளையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் பாதசாரி வீதியைக் கடப்பதற்காக வழிவிட்டு மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார்.

அவ்வேளையில் பிரதான வீதியால் வந்து கொண்டிருந்த பொலிஸ் வாகனம் நிறுத்திய நிலையில் நின்றிருந்த இளைஞரின் மோட்டார் சைக்கிளில் மோதி தள்ளிச் சென்றுள்ள நிலையிலேயே இளைஞர் படுகாயமடைந்தார்.
இச்சம்பவம் குறித்து மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.




SHARE

Author: verified_user

0 Comments: