31 Oct 2016

கலைகளைநுகர்வோர்களாகமாத்திரம் இல்லாமல் அதைஅடையாளப்படுத்துபவர்களாக இருக்கவேண்டும்

SHARE
(துறையூர் தாஸன்)

சமூகநல்லுறவுக்கானகலைப் பண்பாட்டுத் திருவிழா 2016 ஒக்டோபர் 27தொடக்கம் 29 வரையானகாலப்பகுதிக்குள் கனகரெத்தினம் விளையாட்டரங்கு,விபுலானந்தாமத்தியகல்லூரிவளாகம்,சண்முகாவித்தியாலயம்,விபுலானந்தர் மணிமண்டபம் மாளிகைக்காடுபள்ளிவாசல் ,மாவடிப்பள்ளி அல் அஸ்ரப் மகாவித்தியாலயம் போன்றவற்றைகளமாகக் கொண்டுநடைபெற்றது.
தேசியஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்துக்குமானஅலுவலகம்,ஐரோப்பியஒன்றியம்,ஜேர்மன் ஒத்துழைப்புமற்றும் யூத் கெயார்,யூத் கிரியெற்ஆகியவற்றுடன் இணைந்து,கிழக்குப் பல்கலைக்கழகசுவாமிவிபுலானந்தாஅழகியற் கற்கைகள் நிறுவகம் இவ்வாண்டுகலைகளின் கலாசாரத் திருவிழாவினைசுவாமிவிபுலானந்தர் அவதரித்தபழம் பதியானகாரைதீவைமையமாகக் கொண்டுநடைபெற்றது.

இவ்ஆரம்பநிகழ்வைதொடக்கிவைப்பதற்காகபிரதமஅதிதியாகமனோகணேசன்,கிழக்குப் பல்கலைக்கழகஉபவேந்தர் த.ஜெயசிங்கம்,சுவாமிவிபுலானந்தாஅழகியற் கற்கைகள் நிறுவகபணிப்பாளர் சி.ஜெயசங்கர்,கல்விமான்கள்,கலைஞர்கள் ,பாடசாலைஅதிபர்கள் ,மாணவர்கள்,சமூகநலன் விரும்பிகள்,உட்படபலர் இதன்போதுகலந்துசிறப்பித்தனர்.
வேடுவர்,பறங்கியர்,காப்பிலியர்,தெலுங்கர்,அருந்ததியர் போன்றசமூகங்களின் கலைச்செயற்பாடுகளும் சமூகஅங்கீகாரமும் எனும் தலைப்பினாலானமூன்றாம் நாள் கலந்துரையாடல் கருத்தமர்வில்சுவாமிவிபுலானந்தாஅழகியற் கற்கைகள் நிறுவகபணிப்பாளர் சி.ஜெயசங்கர் அவர்களும் பேராசுந்தரனார் பல்கலைக்கழகபேராசிரியர் ஸ்ரீபன் அவர்களும் தலைமைதாங்கினர்.இக் கருத்தாடலில்பல்கலைக்கழகமாணவர்கள்,பாடசாலைமாணவர்கள்,கலைஞர்கள்,உட்படபலர் இதன்போதுகலந்துகொண்டனர். 

மூன்றாம் நாள் நிகழ்வின் விசேடஅதிதியாககலந்துகொண்டுசிறப்பித்தபேராசிரியர் ஸ்ரீபன் அவர்கள் தனதுஉரையில் படிப்பறிவில்லாதநாட்டுப்புறமக்களின் கலைவடிவங்களில் இருந்தேகோட்பாடுகளும்  எண்ணங்களுமேஎடுக்கப்பட்டனஎன்றும் உயர்ந்ததாகசொல்லப்படுகின்றபலகலைவடிவங்கள் தொடர்பானகோட்பாடுகள் உருவாகுவதற்குபாரம்பரியக் கலைவடிவங்களேஅடிப்படையாக இருந்ததென்றும் பாரம்பரியக் கலைவடிவங்களில் இருந்தேஉயர்வாகசொல்லப்படுகின்றகலைவடிவங்களுக்கானகோட்பாடுகளும் கொள்கைகளும் எண்ணங்களும் உருவாக்கப்பட்டனஎன்றும் தமிழ்நாட்டிலுள்ளதெருக்கூத்துக்கலையைபார்த்துவிட்டுச்சென்றமேலைத்தேயநாடகவியலாளரானபேட்டோல் பிரெக்ட்,திரைச்சீலைபிடிக்கின்றகட்டியக்காரன் பாத்திரத்தைஅடிப்படையாகவைத்துக்கொண்டே தூரப்படுத்தல் உத்தியின் ஊடாகதனதுநவீனநாடகத்தைமுன்னெடுத்தார் என்றும் காவியபாணிநடிப்பின் அச்சாணிஅம்சமானதொலைப்படுத்தல் உத்தியானதுஎமதுமரபுவழிக் கலைவடிவமானதெருக்கூத்தில் இருந்துஎடுக்கப்பட்டதெனவும் பாரம்பரியக் கலைகளும் கலைஞர்களும்,செவ்வியல் கலைகளும் கலைஞர்களும் சமமானவர்களேஎன்றும் கலைகளைஆற்றுகைசெய்யும்ஆற்றுகையாளர்களே,கலைகளைபாகுபடுத்திக் காட்டக்கூடாதெனவும் மரபை,பாரம்பரியத்தைசுமந்துசெல்லக்கூடியகடத்தப்படக்கூடியவர்களாகியகலைஞர்கள் அனைவரும் அதைபோற்றுபவர்களாக இருக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும்கல்விக்கூடமோகல்விநிறுவனங்களோசெய்யமுடியாதபலவிடயங்களைகலைஞர்கள் செய்துகொண்டிருக்கின்றனர் என்றும் வெகுசனபண்பாட்டின் இயல்பும் கலைகளின் மரபும் வெவ்வேறுஎன்றும்.கலைகளானவைமக்களைஒன்றினைக்கக்கூடியதாகவும் ஆறுதல்படுத்தக்கூடியதாகவும் இருப்பதோடுசொந்தமதிப்புகளைமரபுகளைஉதரித்தள்ளுகின்றசமூகமானதுபலவீனமானசமூகமாக இருப்பதோடுஎல்லாவற்றுக்கும் இன்னொன்றைசார்ந்து இருக்கும்,நம்பும் சமூகமாகவும் மாறும் எனவும் நமக்கானதேவையைநாமேதேடிக்கொள்ளவேண்டும் எனவும் கலைகளைநுகர்வோர்களாகநாம் மாறக்கூடாதென்றும் அதாவதுஅதைபார்ப்பவர்களாகமாத்திரம் இல்லாமல் அதைஆற்றுபவர்களாகமாறிஎமதுஅடையாளங்களைவெளிப்படுத்தவேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்
சுவாமிவிபுலானந்தாஅழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் சி.ஜெயசங்கர் தனதுஉரையில் இந்தியசுந்தரனார் பல்கலைக்கழகபேராசிரியர் ஸ்ரீபன் அவர்களின் உரையானதுமிகவும் பொருத்தமானதும் அவசியம் கவனத்திற் கொள்ளவேண்டியதுமானஉரையாக இருந்ததென்றும் கலைகளைஅதற்குரிய இயல்பானவெளிகளில் ஆற்றுகைசெய்வதோடுகலைகளைஆற்றுகைசெய்கின்றசமூகங்களுடன் இணைந்துஊக்குவித்துவேலைசெய்;து பங்கெடுப்பதுபாரம்பரியங்கள் பேணவேண்டும் என்பதற்காகஅல்லாமல் பல்வேறுசமூகங்கள் இயங்குகின்ற சூழலில் தன் சுற்றத்துடன் இணைந்துகொண்டாடிமகிழ்கின்றஒருசமூகத்தைஉருவாக்குவதற்காகவேஆகும்.
மேலும் போட்டிப் பரீட்சையைமையப்படுத்தியகல்வியானதுமற்றவர்களுடன் உரையாடுவதைபகிரும் பண்பாட்டினைதடுப்பதோடுஅதாவதுநான் வெற்றிபெறவேண்டுமானால் மற்றவர்களுடன் இருந்துஎடுத்துக்கொள்ளவேண்டும் ஆனால் தன்னிடமிருப்பதைதான் எவற்றையும் பகிரக்கூடாதுஎன்கின்றபண்பாட்டைஎம்முடையகல்விஉருவாக்கிக் கொண்டுவருகின்றதுஎன்றும் நாம் எல்லாவற்றையும் வாங்குபவர்களாகவும்தொலைக்காட்சிக்குமுன்னால் குந்தி இருந்துபார்த்துக் கொண்டிருப்பவர்களாகவும்  எம் சமூகம் மாற்றப்பட்டுக் கொண்டுவருகின்றதுஎன்றும் குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையில் பெரும்பாலானசமூகங்கள் வாழ்கின்றஒருமாகாணமாககிழக்குமாகாணம் உள்ளதோடுவெவ்வேறுசமூகங்கள் கொடுத்தும் பகிர்ந்தும் முரண்பட்டும் சேர்ந்தும் வாழ்ந்தும் வந்தநீண்டஒருவரலாற்றையுடையமாகாணமாககிழக்குமாகாணம்  உள்ளதென்றும் எங்களுக்குள் இருக்கின்றதனித்துவங்கள் பொதுத்தன்மைகள் வித்தியாசங்கள் என்பவைகவனத்திற் கொள்ளப்படவேண்டுமெனவும் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

மூன்றாம் நாள் நிகழ்வின் இரவுநேரஆற்றுகைகளானவாகரைவேடுவசமூகத்தின் சமூகபொருளாதாரநிலைமைகளைபிரதிபலிக்கும் புலிக்கூத்துஆற்றுகையும் ,மட்டக்களப்புப் பிரதேசத்தினரின் பறையிசையும் பறைமேளக்கூத்துஆற்றுகையும்,இஸ்லாமியமாண்புகளைப் பேசும் பக்கீர் பைத் றபான் இசைஆற்றுகையும்,நடனஅசைவுகள் வழி பேசும் அம்பாறை இறக்காமம் பகுதிபிரதேசத்தினரின் வண்ணம் ஆற்றுகையும்,இஸ்லாமியவாழ்வியல் திருமணசடங்குமுறைகள் என்பனவும்,போர்த்துக்கீசநடனம் கபறீஞ்சா,லான்சஸ் பாடல்களும்,வேடுவர் சடங்குப்பாடல்களும்,வெடியரசன் கூத்தும்,வாழ்வியல் பாடல்களானஒப்பாரி,தாலாட்டு,உழவர் ,மீனவர் பாடல் போன்றனவும் திருகோணமலைகிண்ணியாப் பிரதேசத்தில் பயில்வில் இருக்கின்றவாள்வீச்சு,சீனடி,தீப்பந்தவீச்சுஎன்பனவும் 1970 -1980 களில் ஈழத்துகலைஞர்களால் எழுதப்பட்டமெல்லிசைப் பாடல்கள் என்பனவும் ஆற்றுகைசெய்யப்பட்டன.

கலைத்திருவிழாவில் பன்மைத் தன்மையானபாரம்பரியக் கலைவடிவங்களையும் அவர்களதுஆளுமையினையும் ஒரேமேடையில் கண்டுகொள்ளமுடிந்தது.  













SHARE

Author: verified_user

0 Comments: