12 Oct 2016

வாதப் பிரதி வாதங்களுடன் நடந்தேறிய போரதீவுப் பற்று பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம்.

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (11) பிற்பகல் போரதீவுப்பற்று பிரதேச கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
கிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர்களான பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி, நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,  மற்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஞா.கிருஸ்ணபிள்ளை, இரா.துரைரெத்தினம்,  ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கம், மற்றும்,  பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம், ஏனைய திணைக்களத் தலைவர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

போரதீவுப்பற்றில் தற்போது 546 வீடுகள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன மேலும் 3600 வீடுகள் தேவை. 

இப்பிரதேசத்தில் திவிநெகும விசேட செயற்றிட்டத்தின்  கீழ் முதற்கட்டமாக 600 குடும்பங்களுக்கு வாழ்வாதாரம் மற்றும் சுயதொழில் மேற்கொள்ளும் பயனாளிகளை ஊக்குவித்தல்.

8 வருடகாலமாக புணரமைப்பின்றிக் காணப்படும் மருதங்குடலை வீதியின் புணரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தல்.

01.01.2017 இல் சுரவணையடியூற்றுக் கிராமத்தில் புதிதாக ஆரம்ப பாடசாலை ஒன்றை இஸ்த்தாபித்தல்.

இதுவரையில் புணரமைப்பின்றிக் காணப்படும் பெரியபோரதீவு - பழுகாமம் பிரதான வீதியின் அபிவிருத்திப் பணிகளைத் துதரிதப்படுத்தல்.

2615 விண்ணப்பங்கள் புதிதாக மின்சார இணைப்புக்கான விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன இவற்றுள் 2085 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளன மிகுதியானவர்களுக்கு துரிதமாக மின்சாரம் வழங்குதல்.

குழாய் மூலம் நீர் பெறுவதற்காக 2000 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன இவற்றுள் 1800 நபர்களுக்கு இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன, பிரதான இணைப்புக்கள் பொருத்தும் வேலைகளை இவ்வருடத்திற்குள் செய்து முடித்தல், உள் வீதிகளுக்கு குழாய் நீர் பொருத்தும் வேலைகளுக்கு விசேட திட்ட முன் மொழிவுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, களுமுந்தன்வெளி, சுரவணையடியூற்று, திக்கோடை, வம்பியடியூற்று போன்ற குழாய நீர் இல்லாத கிராமங்களுக்கு நீர் இணைப்புக்களை வழங்குதல்.

தினமும் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்படும் வேத்துச்சேனைக் கிராமத்திற்கு இரண்டு மாடிகளைக் கொண்ட கட்டடம் ஒன்றைக் கட்டுதல்.

புதிய வீடமைப்புத்திட்டமொன்றை இப்பிரதேசத்தில் அமைத்தல் இதற்கு பிரதேச செயலாளர் 5 ஏக்கர் நிலப்பரப்பை வழங்குதல்.

43 கிராம சேவையாளம் பிரிவுகளைக் கொண்ட இப்பிரதேசத்திற்கு புதிய வீடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் விகிதாசார ரீதியில் ஒதுக்கீடு செய்தல்.
பிரதேச சபையால் வழங்கப்படும் குடிநீர் வசதிகளை மேலும் விஸ்த்தரித்தல், தற்கு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பு 10 நீர் தாங்கிகளைப் பெற்றுக் கொடுத்தல்.

அதிபர்கள் இல்லாத பாடசாலைகளுக்கு புதிதாக அதிபர்களை நியமிக்க நடவடிக்கைகளைத் துரித்தப்படுத்தல்.

போன்ற பல தீர்மானங்கள் இதன்போது பல வாத பிரதிவாதங்களுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டன.







SHARE

Author: verified_user

0 Comments: