4 Oct 2016

நாட்பட்ட நேயினால் இறப்பவர்களில் கூடுதலானோர் உடல்.உள,ஆன்மீக ரீதியான வலிகளை தாங்கியவண்ணம் இறக்கின்றனர்.

SHARE
நாட்பட்ட நேயினால் இறப்பவர்களில் கூடுதலானோர் உடல்.உள,ஆன்மீக ரீதியான பாதிப்பக்களுடன்  துன்பப்பட்டவாறு பலதரப்பட்ட வலிகளை தாங்கியவண்ணம் இறக்கின்றனர். இதனை
கட்டப்படுத்த வலிநிவாரண சிகிச்சை முக்கியம் இந் நிலமையை மாற்றியமைக்க வேண்டும் என மட்டக்களப்பு போதனா வைத்தியாசாலையின் புற்று நோய் வைத்திய நிபுணரும் வலிநிவாரண சிகிச்சை நிபுணருமான சாமா குணதிலக்க தெரிவித்தார்

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட வலிநிவாரண சிகிச்சை வாரத்தினை முன்னிட்டு   வைத்தியரகள்,தாதியர்களை தெளிவூட்டும் விழிப்புணர்வுக் கருத்தரங்கு களுவாஞ்சிகுடி ஆதாரவைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன் தலைமையில் திங்கட் கிழமை (03) நடைபெற்றது இக் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

வலி நிவாரண சிகிச்சையின் நோக்கம் நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் உடல் ரீதியாகவும், உளரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் பாதிப்புக்குள்ளாகி நிம்மதியற்று  வலியுடன் இறக்கக்கின்றனர் இந் நிலையே இல்லாதொளித்தலே இச்சிகிச்சையின் பிரதான நோக்கமாக அமைக்கின்றது.

இச் சிகிச்சையூடாக உலகில் அனேக நாடுகளிலே நோயாளிகள் இறக்கும் வரை நிம்மதியாகவே இருந்து  இறக்கின்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளனர். அந் நாடுகளில் இதற்கான தனியான வைத்தியர்கள் நியமிக்கப்பட்டு வைத்திய நிலையங்களும் உருவாக்கப்பட்டுள்ளது. இந் நிலையினை இலங்கையிலும் நாங்கள் ஊருவாக்க வேண்டும். இலங்கையைப் பொறுத்தளவில் பாரிய நோயினால் ஒருவர் பாதிக்கப்பட்டால் அவரின் வழமையான செயற்பாடுகளுக்கு இடமளிக்காமல் தடைவிதிக்கும் நிலை கூடிக் கொண்டு செல்வதனை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

குழுவாக செயற்ப்படுவதன் ஊடாகவே இச் சிகிச்சையை நாங்கள் மருத்தவத் துறைக்குள் உள்வாங்கிக் கொள்ள முடியும். இதற்கு எமக்கு பலதரப்பட்ட வளங்கள் தேவைப்படலாம் அது வேறுபிரச்சினை ஆனால் இதற்கு வைத்திய துறையில் உள்ள அனைவரும் சரியானவர்கள் என நாங்கள் சிந்திக்க வேண்டும் காரணம் எவர் எப்படி இறந்தாலும் பரவாயில்லை என கைகட்டி கொண்டு பார்வையாளராக செயற்படுபவர்களும் உள்ளனர். சிகிச்சையை உள்வாங்கி செயலாற்ற தயாராக வேண்டும் அவ்வாறு தயாராகின்ற நிலையில்தான்  நாங்களும் வளர்முக நாடகளைப் போன்று நோயாளிகள் இறக்கம்வரை நிம்மதியுடன் இறக்கின்ற நிலையினை இங்கும் உருவாக்க முடியும்.

இன்று மனிதனுக்கு சவாலாக பல தரப்பட்ட நோய்கள் உருவாகிக் கொண்டு இருக்கின்றது இருந்தாலும் புற்று நோய், மாரடைப்பு, சிறுநீரக பாதிப்பு, காசநோய் போன்றவற்றின் ஊடாக நோயாளி ஒருவர் பாரிய வலியினை எதிர்கொள்ள வேண்டியேற்படுகின்றது.

இந்தவலியானது உளரீயாகவும்,உடல்ரீயாகவும், ஆன்மீக ரீதியாகவும் ஏற்படுகின்றது அதாவது குறித்த நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனதுகுடும்பம்,பிள்ளைகள் பற்றிசிந்திக்கக்கூடும் நோய்க்கு சிகிச்சையளிக்கும் அதேநேரம் அவரது நோயாளியின் குடும்ப ரீதியான பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய நிலையிலும் நாங்கள் உள்ளோம் எனவே வலிநிவாரண சிகிச்சை வழங்குவதற்க அனைவரும் தயாராக வேண்டும் என அவர் தெரிவித்தார்.







SHARE

Author: verified_user

0 Comments: