2 Oct 2016

மட்டக்களப்பு மாவட்டத்தில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுகின்றது என்றால் எனக்கு அறியத்தரவும்.

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுகின்றது என்றால் அவற்றை உரிய ஆதாரங்களுடன் எனக்கு அறியத்தந்தால் அதனை நான் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு செல்வேன். 
என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பட்டடிப்புத் தெகுதியின் அமைப்பாளர் சாணக்கியன் இராசாமாணிக்கம் தெரிவித்துள்ளார். வியாழக் கிழமை (29) இரவு மட்டக்களப்பு ஓத்றீ விடுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார், இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்.. 

கடந்த அரசாங்கத்தில் நடைபெற்ற அபிவிருத்தி வேலைத் திட்டங்களைவிட தற்போது அபிவிருத்திகள் குறைவாகத்தான் நடைபெறுகின்றன. கடந்த அரசாங்கம் பெற்ற கடன்களை முடித்த பின்னர் மீண்டும் நிதியுதவிகள் கிடைத்த பின்னர்தான் அபிவிருத்திகளைத் துரிதப்படுத்தலாம் என தற்போதைய அரசாங்கம் தெரிவிக்கின்றது. ஆனால் எதிர் காலத்தில் இன்னும் பல அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நடைபெறும் என்பதை நான் தெரிவிக்கின்றேன்.

எமது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் தற்போதைய அமைச்சரவையில் உள்ள அமைசர்கள் மூலம் வீடமைப்பு உள்ளிட்ட பல வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வந்தாலும் வீதிகளைப் புணரமைப்பதற்கான பல திட்ட முன் மொழிவுகளையும் முன் வைத்துள்ளோம். ஆனாலும் தற்போது கூட்டு அரசாங்கம் என்பதனால் அபிவிருத்தியை நான் மாத்திரம் செய்ய வேண்டும் என்பதிற்கில்லை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஏனைய கட்சிகளும் மேற்கொள்ளக் கூடிய நிலைமைதான் தற்போது உள்ளது.

2013 ஜனவரி 20 ஆம் திகதி கொண்டாடப்பட்ட தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரான எனது அப்பப்பா சீ.மு.இராசமாணிக்கம் அவர்களின் 100 வது பிறந்த நாள் நிகழ்வுக்கு நான் வருகை தந்திருந்தேன் அப்போது எனது அப்பவிடம் மட்டக்களப்பிலுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அழைத்து தேர்தலில் இறங்கும் எண்ணம் இருந்தால் இன்னும் 5 வருடம் கழித்து பொறுத்திருந்து எனக்கு விட்டுத்தந்து விட்டு நீங்கள் வரவேண்டும் என தெரிவித்திருந்தார். அப்போது எனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை.

பின்னர்தான் ஸ்ரீ லங்காத சுதந்திரக் கட்சியில் நான் இணைந்து கொண்டு தந்போதுவரை அரசியல் செய்யும் நான் எதிர்காலத்தில் அது எவ்வாறு அமையும் என்பதை கடவுள்தான் தீர்மானிப்பார்.

எனத் தெரிவித்த அவர்…. வட மாகாணத்தில் நடைபெற்ற எழுக தமிழ் நிகழ்வு பற்றியும் கருத்து தெரிவித்தார்.

பொங்கு தமிழுக்கு மக்கள் வந்தது போல் எழுக தமிழுக்கும் வட மாகாண மக்கள் வந்துள்ளார்கள். இந்நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ள கருத்துக்களை அங்கு வந்திருந்த மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள், அங்கு வந்திருந்த மக்கள் அவர் தெரிவித்த கருத்துக்களை எற்றுக் கொள்ள வில்லை என்றால் அவ்விடத்திலிருந்து உடன் கலைந்திருக்க வேண்டும். மக்களால் தெரிவு செய்யப்பட்ட வட மாகாண முதலமைச்சரைப் பெறுத்தவரையில் அது மக்களுடைய கருத்தாகத்தான் உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.






SHARE

Author: verified_user

0 Comments: